தொடாதே விவசாய நிலத்தை - கற்குவேல் பா
தொடாதே விவசாய நிலத்தை
````````````````````````````````````
மானியங்கள் அத்தனையும்
முறையே அவனிடமிருந்து
அவிழ்த்து எடுத்தாகிவிட்டது
எஞ்சியதில் மிஞ்சுவது - அவனது
கோவணம் மட்டுமே
அதையும் கண்கொண்டு
அவிழ்க்க நினைக்காதீர் - பின்
நிர்வாணம் என்பது
அவனுக்குரியதாகாது - மாறாக
தேசத்தை குறித்துவிடும் !
- கற்குவேல் .பா