அமிர்தம் உண்டும் அழியும் உடல்

முட்செடிகள் குத்துவதை விட
முதல் இதயம் விலகுவதும்....

வேல்கம்பு குத்துவதை விட
வேண்டியவர்கள் தவிர்ப்பதும்....

கல்லடி படுவதை விட
கனவு வீணாக்கப்படுவதும்.....

அமிலம் அரிப்பதைவிட
அம்மையப்பனை பிரிவதும்.....

தூக்கிலிடப்படுவதை விட
துணையை இழப்பதும்...

நாசமாக்கப் படுவதை விட
நட்பு நழுவுவதும்....

அமிர்தம் உண்டும்
அழியும் உடலாகிறது...

எழுதியவர் : ka.nanjappan (12-Oct-15, 7:52 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
பார்வை : 88

மேலே