நஞ்சப்பன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நஞ்சப்பன் |
இடம் | : துருசாம்பாளையம் |
பிறந்த தேதி | : 10-Nov-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 524 |
புள்ளி | : 138 |
இலக்கியத் தாய் மடி தேடும் இன்னுமொரு குழந்தை
எழுத வேண்டுகிறாய்
எழுத்தைத் தீண்டுகிறாய்
துளிர வேண்டுகிறாய்
துளிரைத் தூண்டுகிறாய்
காவல் மீறுகிறாய்
காதல் ஊற்றுகிறாய்
காலம் சுழற்றுகிறாய்
கதவிடை பிதற்றுகிறாய்
கம்பன் தேடுகிறாய்
காவியம் வேண்டுகிறாய்
கவனாய் துரத்துகிறாய்
காமனை மிரட்டுகிறாய்
ஓவியம் காட்டுகிறாய்
ஓடையாய் உடைகிறாய்
மேவியே அலைகிறாய்
மேனியை கலைகிறாய்
சாவியை தருகிறாய்
சடுதியில் குலைகிறாய்
சாகசம் புரிகிறாய்
சந்தியில் பிரிகிறாய்
கடைக்கண் ஒளி தாளாமல்
கம்பன் கனிந்து விட்டேன்
இயந்துந்தன் கதை எழுத
இமயமாய் எழுந்துவிட்டேன்
சந்திரன் சரிந்து விழ
இந்திரன் இடிந்து வி
நான்கு வயது
நங்கை!!!??? சீரழிப்பு....
முதலமைச்சர் நாற்காலியிலும்
ஒரு நங்கை.....
--------------------------------------------------------
விதை வாங்க முடியாமல்
விவசாயி தற்கொலை....
ஆயிரம் கோடி ஏய்த்தும்
சுகமாகச் சுற்றும் முதலைகள்...
---------------------------------------------------------
படித்தவனுக்கு இப்பொழுதெல்லாம்
பிச்சையெடுக்கும் வேலையுமில்லை...
அரசு இந்த ஆண்டும்
அறுபது கல்லூரிக்கு அனுமதி....
-----------------------------------------------------
தலைவனின் படத்திற்கு
குடம் குடமாய் பாலாபிஷேகம்..
பசியில்வாடும் குழந்தைக்குப்
பால் இல்லை ...
--------------------
அழகான பொருள் என்று
எல்லோரும் ஓடிவந்து வாங்க
நீ அதைவிட அழகாய்
மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாய்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ அழத்துவங்கினாய்
நானோ ஒரு ஓவியம் குலைவதை
பார்க்கத் தயாரானேன்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ படுத்திருக்கிறாய்
உன்னையே
ஒரு புல்லாங்குழலாய்
வாசிக்கத் தோன்றியது எனக்கு.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உள்ளங்கை நீட்டி
சத்தியமா.? என்கிறாய் நீ.!
உன் உள்ளங்கை தொடவே
சத்தியம் செய்கிறேன் நான்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இத்தனை வரு
குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ
ரோஜாக்கள் நிறம்மாறுகின்றன
பரிணாமத்தாலல்ல
பாவையிவள் ஆழ் மௌனத்தால்....
தேன்சிட்டுக்கள் கூடியழுகின்றன
வலியாலல்ல
வஞ்சியவள் சோக ஒலியால்....
மாம்பூக்களும் மடிந்து விழுகின்றன..
மயக்கத்தாலல்ல
மங்கையவள் தேக உரக்கத்தால்....
மழைமேகங்களும் விழுந்துமறைகின்றன
மழையாலல்ல
மாதவள் தேக வலியால்.....
அன்னம் மனம்
அலைய விட்ட
மன்னன் எங்கே??
பேதையின் நெஞ்சு
நோகயில் கொஞ்ச
விரைந்து வாடா காதல்
மருந்து தாடா....
ரோஜாக்கள் நிறம்மாறுகின்றன
பரிணாமத்தாலல்ல
பாவையிவள் ஆழ் மௌனத்தால்....
தேன்சிட்டுக்கள் கூடியழுகின்றன
வலியாலல்ல
வஞ்சியவள் சோக ஒலியால்....
மாம்பூக்களும் மடிந்து விழுகின்றன..
மயக்கத்தாலல்ல
மங்கையவள் தேக உரக்கத்தால்....
மழைமேகங்களும் விழுந்துமறைகின்றன
மழையாலல்ல
மாதவள் தேக வலியால்.....
அன்னம் மனம்
அலைய விட்ட
மன்னன் எங்கே??
பேதையின் நெஞ்சு
நோகயில் கொஞ்ச
விரைந்து வாடா காதல்
மருந்து தாடா....
முட்செடிகள் குத்துவதை விட
முதல் இதயம் விலகுவதும்....
வேல்கம்பு குத்துவதை விட
வேண்டியவர்கள் தவிர்ப்பதும்....
கல்லடி படுவதை விட
கனவு வீணாக்கப்படுவதும்.....
அமிலம் அரிப்பதைவிட
அம்மையப்பனை பிரிவதும்.....
தூக்கிலிடப்படுவதை விட
துணையை இழப்பதும்...
நாசமாக்கப் படுவதை விட
நட்பு நழுவுவதும்....
அமிர்தம் உண்டும்
அழியும் உடலாகிறது...
அவள் தேவி
அவன் தேவன்
அவர் தேவதேவி
பல மனதில்.....
அவள் அழகி
அவன் அழகன்
அது அசிங்கம்
அதே மனதில்.....
அர்த்தநாரீஸ்வரர்
அதிரடி சிகண்டி
கற்றதும் இவரே
போற்றுவோரும் இவரே ....
பிள்ளை வேண்டி
தொல்லை தாங்கி
பெற்றதும் இவரே
தூற்றுவோரும் இவரே....
பெற்றதும் நினைக்கல
கற்றதும் நினைக்கல
சவமென சடுதியில்
சுடு நெருப்பிடுகையில்.....
அன்புத் தந்தை
அழகுத் தாய்
பெற்ற பிள்ளை
பேரழகுக் கிள்ளை.....
பித்து ஹார்மோனால்
சித்தம் தடுமாறி
சக்தி சிவனாக
சிவன் சக்தியாக.....
பெத்த மனமும்
கொத்தும் கழுகும்
சித்த நேரம்
சேர்ந்து விடுது....
மன்மதன் இரதி
மாறித் தோன்ற
சொட்டும் குழாய் நீர்
தட்டும் கை ஓசை
சுட்டும் புரிவதில்லை இரு
பட்டம் இயற்கைக் காப்பில்
கெட்ட விதையாய் முளைக்காமல்
மட்ட மதிப்பெண்களுக்காய் பெறுவதினால்.....