சில சமயங்களில் சிதைகிறது மனம்

நான்கு வயது
நங்கை!!!??? சீரழிப்பு....

முதலமைச்சர் நாற்காலியிலும்
ஒரு நங்கை.....

--------------------------------------------------------

விதை வாங்க முடியாமல்
விவசாயி தற்கொலை....

ஆயிரம் கோடி ஏய்த்தும்
சுகமாகச் சுற்றும் முதலைகள்...
---------------------------------------------------------

படித்தவனுக்கு இப்பொழுதெல்லாம்
பிச்சையெடுக்கும் வேலையுமில்லை...

அரசு இந்த ஆண்டும்
அறுபது கல்லூரிக்கு அனுமதி....
-----------------------------------------------------

தலைவனின் படத்திற்கு
குடம் குடமாய் பாலாபிஷேகம்..

பசியில்வாடும் குழந்தைக்குப்
பால் இல்லை ...
--------------------------------------------

மாட்டுக்கறி முரண்
மதச்சாய கொலை....

மாட்டுத்தோல் உபகரணங்கள்
வீடு முழுதும்.

----------------------------------------------

நடிகையைக் காண
கடலென கூட்டம்...

குடி நீர் கேட்க
கூடியதோ நாற்பது..

------------------------------------------

விபத்துடன்
விரும்பி செல்ஃபி

நூற்றியெட்டை அழைக்க
ஏனோ வரமறுக்கிறது...

--------------------------------------------

எழுதியவர் : க.நஞ்சப்பன் (17-Oct-15, 7:56 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
பார்வை : 131

மேலே