விரைந்து வாடா காதல் மருந்து தாடா

ரோஜாக்கள் நிறம்மாறுகின்றன
பரிணாமத்தாலல்ல
பாவையிவள் ஆழ் மௌனத்தால்....
தேன்சிட்டுக்கள் கூடியழுகின்றன
வலியாலல்ல
வஞ்சியவள் சோக ஒலியால்....
மாம்பூக்களும் மடிந்து விழுகின்றன..
மயக்கத்தாலல்ல
மங்கையவள் தேக உரக்கத்தால்....
மழைமேகங்களும் விழுந்துமறைகின்றன
மழையாலல்ல
மாதவள் தேக வலியால்.....
அன்னம் மனம்
அலைய விட்ட
மன்னன் எங்கே??
பேதையின் நெஞ்சு
நோகயில் கொஞ்ச
விரைந்து வாடா காதல்
மருந்து தாடா....