ஆதிப்பிழைகள்

ஓவ்வொன்றாய் பதிலளித்தான்
சரியாகவே இருந்தன
தடுமாறவே இல்லை
பாராட்டும் கிடைத்தது
தம்பிகளனைவரும் பிழைத்தனர்
பின் வீடுதிரும்பினான்
இன்னும் பதில் சொல்லமுடியா கேள்வியொன்று இருந்தது…
திரெளபதியின் கேள்வியது…


பலரோடு சண்டையிட்டு
நாடு விட்டு நாடு போய்
சண்டையிட்டும்
மீட்ட பின்
மனைவியை தீ குளித்து நிரூபிக்க சொன்ன கற்பையும்
அந்தப்பார்வையையும் எப்படி எதிர்கொண்டான் ….

தமிழில் இல்லை ஆதிப்பிழைகள்
கொக்கென நினைத்தாயோ?
தேரா மன்னா…..
இப்படி…….

எழுதியவர் : ரிஷி சேது (13-Oct-15, 8:12 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 65

மேலே