பட்டாம்பூச்சிகள்

குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் விடுகிறாய்..
நான் என் வீட்டு மாடியில்
நின்று நூல் விடுகிறேன்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அழகி க்கு துணைக்கால் வராதே
நீ ஏன்
உன் தோழியுடனே சுற்றுகிறாய்.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறைவன் நல்ல விவசாயி
ஒரு கொடியில்
இத்தனை கனிகளா.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மரத்தின் கீழ் நிற்கிறாய்
ஒரு
உதிர்ந்த கனியென.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
கோயில் தூண்களில் சாயாதே
வெள்ளிச்சிலை என
விளக்கேற்றிவிடுவார்கள்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
வெடி சப்த்தத்திற்கு
பறக்கும் பறவையென பறந்துபோகிறது
நீ ஆடை சரிசெய்கையில்
அங்கே அமர்ந்திருந்த கண்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூமி வெப்பமயமாதல்
என்பது
நீ புரண்டு படுப்பதால்தான்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
என் எதிர்காலம் அறிய
ஜாதகம் பார்க்கத்தேவையில்லை..
எதிர்வீட்டு ஜன்னல்
பார்த்தாலே போதும்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

எழுதியவர் : நிலாகண்ணன் (28-Sep-15, 12:07 am)
Tanglish : pattampoochchigal
பார்வை : 956

மேலே