என் உலகநாயகன்

எழ உன் முகம்
தொழ உன் அகம்

தாக்க உன் கோபம்
காக்க உன் கைகள்

பயில உன் விருப்பம்
துயில உன் தோள்கள்

உண்ண உன் தீண்டல்
பருக உன் ஸ்பரிசம்

நீராட நீ தந்த கண்ணீர்
நெஞ்சோடு நீ தந்த சோகம்

அன்றாடம் அனைத்திற்கும்
ஆதியே மூலமே...

என் உலக இயக்கத்தின்
இன்றியமையா இறைவனே...

அணு அணுவாய் அணுவிற்குள்
ஆட்சி செய்யும் ஆதவனே...

சகலகலா வல்லவனே
என் உலகநாயகனே...

எழுதியவர் : சியாமளா (27-Sep-15, 11:26 pm)
பார்வை : 151

மேலே