காதலனே, என்னை மறந்து விடு

காதலனே,

"கண்கள் செய்தது தவறா?
நெஞ்சம் ஏற்றது தவறோ?
நான் செடியில் பூத்த பூ?
காதல் மனம் என் வாசம்,
ஆயினும்
இந்த பூவைச்சுமந்தவன்
என் போக்கிடம் வேறாக்கிட,
விலகுகிறேன் உன் வழியிலிருந்து.
மன்னிப்பாயா? "


காதலியே,

"மறத்தலும்
மன்னித்தலும்
எளிதல்ல...
விட்டுக் கொடுத்தலும்
எளிதல்ல எனின்............
இருப்புக்கள்
இழப்புகள் ஆன பின்,
வலி தாங்குதல்
மட்டும்
எளிதாகுமோ? "

எழுதியவர் : செல்வமணி (27-Sep-15, 11:14 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 178

மேலே