பொன்னிறக் கண் திற
![](https://eluthu.com/images/loading.gif)
எழுத வேண்டுகிறாய்
எழுத்தைத் தீண்டுகிறாய்
துளிர வேண்டுகிறாய்
துளிரைத் தூண்டுகிறாய்
காவல் மீறுகிறாய்
காதல் ஊற்றுகிறாய்
காலம் சுழற்றுகிறாய்
கதவிடை பிதற்றுகிறாய்
கம்பன் தேடுகிறாய்
காவியம் வேண்டுகிறாய்
கவனாய் துரத்துகிறாய்
காமனை மிரட்டுகிறாய்
ஓவியம் காட்டுகிறாய்
ஓடையாய் உடைகிறாய்
மேவியே அலைகிறாய்
மேனியை கலைகிறாய்
சாவியை தருகிறாய்
சடுதியில் குலைகிறாய்
சாகசம் புரிகிறாய்
சந்தியில் பிரிகிறாய்
கடைக்கண் ஒளி தாளாமல்
கம்பன் கனிந்து விட்டேன்
இயந்துந்தன் கதை எழுத
இமயமாய் எழுந்துவிட்டேன்
சந்திரன் சரிந்து விழ
இந்திரன் இடிந்து விழ
மந்திர மண் மகளே
பொன்னிறக் கண் திற.....