சப்தமிடும் நிதர்சனம்

எத்தனை முகங்கள் பார்த்ததிலே
சாயல் மாறிய சாத்தியங்கள்!
எண்ணில் அடங்கா உயிர்களிலே
நிறமாய் குணமாய் மாற்றங்கள்!
விந்தை உலகில் விளங்கா புதிர்கள்
விடைகள் மாற்றும் வினாக்கள்!
அடங்க மறுக்கும் ஆசை வாழ்வில்
ஆரவார கூச்சல்கள் அர்த்தமில்லா அகவல்கள்!
சாலையோர சன்னலிலே சப்தமிடும் நிதர்சனங்கள்!
சாந்தமான மனம் அமையும்
கண் மூடி அகம் பார்க்க!
பரவசமாய் நிலை காண
பசியாற்றும் பணி செய்வோம்
பரிவு எனும் மனம் செய்வோம்!