நாகரிகம்
வேதியல் பொருட்களை
ஊறவைத்து வேகவைத்து
வேரின் வழியாக
கிளைகளில் கொண்டு வந்து
கனிகளாய் சமைத்து
வைத்தது ஒரு மரம்.
அம்மரத்தின் அடியில்
குப்பைகளை கூட்டித் தள்ளி
அமைதியாக அமர்ந்து,
பிஸ்ஸா தின்னான்
பெருமாள்சாமி.