தோல்வி கண்டு துவளாதே

தோல்வி கண்டு துவளாதே!!!


"முடியாதது"- மூளையில் ஏறினால்
முடிந்ததும் "முடியாதது" ஆகி விடும்!!!

நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!

முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!

முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!

முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???

வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!

எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!

எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!

போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???

- பா.வெ.

எழுதியவர் : பா.வெங்கடேசன் (12-Oct-15, 10:46 pm)
சேர்த்தது : பாவெங்கடேசன்
பார்வை : 694

மேலே