அலைகளின் காதல்

அலைகளின் காதல்
உறுமிக்கொண்டு...புரண்டுத் திரண்டு,
காதுகளைக் கிழிக்கும் கர்ஜனையுடன்
கரைதனைத் தேடி மீண்டும் மீண்டும்
வருகின்றன அலைகள்!
பக்குவமில்லாத பார்வையில் இது
சண்டை போலவும், ஒரு போர் போலவும்
தோன்றக் கூடும்!

இடி விழுவது போலந்த வெள்ளம் முழங்குவதெல்லாம்
தனக்குள் நிறைந்த காதல் தனையே!

களைப்புறாமல் போராடிப் போராடி அது உரைப்பதெல்லாம்
மணற் பரப்பின் மேல் அது கொண்ட அன்பினையே!

அதுபோலவே உன்னை நேசிக்கிறேன் உயிரே!
நான் என்ன சொன்னாலும், செய்தாலும்...
உன்னிடமே மீண்டும் வருவேன்,
அந்த அலைகளைப் போலவே!

எழுதியவர் : - கற்பகம் (13-Oct-15, 7:46 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : alaikalin kaadhal
பார்வை : 87

மேலே