காதல் என்றும் சாகாது

காதல் என்றும் சாகாது
************************************************

முகத்தைப் பார்த்து அகத்தினைப் படித்து
அகம் அதுள் நேர்ந்த மனதினைப் பணித்து
நகமும் சதையுமாய் இருவரும் இருந்திட
சாகாது காதல் என்றும் என்றென்றும் !

அச்சமும் நாணமும் பெண்மையை காத்திட
இச்சையை மட்டுமே மனதில் கொள்ளாத
ஏச்சும் பேச்சும் நெருங்க இயலாத
ஒச்சமற்ற காதல் சாகாது எப்போதும் !

எப்போதும் மனமிரண்டும் வேற்றுமை காணாது
முப்போதும் இருஇனமும் தப்பாகா நிலைகொள்ள (முப்போதும் == இன்பம் , துன்பம்
சோகம் )
மூப்போதும் வேளையது நமை நெருங்கி வந்தாலும்
அப்போதும் காதல் அது சாகாது நிச்சயமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Oct-15, 9:11 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 98

மேலே