ஊமை பொம்மை
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கு 25 வயசு ஆக போகுது, சைன்டிஃபிக்டா பாத்த, இப்ப தான் நான் ஒரு அடல்ட். 25 வயசு வரைக்கும் எல்லாருமே குழந்தைகள் தானு ஒரு ரிசர்ச் சொல்லுது. அந்த குழந்த மனச இழக்குற நேரம் வந்துருச்சி. இந்த நேரத்துல என்னோட 5 வயசு ஞாபகம் வருது. என்னுடைய தம்பி பேச ஆரமிச்ச நேரம், என் பேர சொல்ல தெரியாம, என்ன " ஜீவீ"," ஜீவீ"-னு கூப்பிடுவான். அன்னிக்கு எனக்கு பிறந்த நாள். பர்த் டே பார்ட்டி. என்னோட நண்பர்களோட துள்ளி விளையாடிட்டு இருந்தன். என் நண்பர்களும் நானும் இனிப்பு சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அப்ப தான் எனக்கு டெட்டி அறிமுகம் ஆனான்.
டெட்டி, ஒரு அழகான கரடி பொம்ம. என்னுடைய பிறந்த நாள் பரிசா என்கிட்ட வந்தான். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, என் தம்பிக்கும். என் தம்பிக்கு குடுக்காம அத என்னோட ரூம்ல வச்சிகிட்டேன். அதுக்கு அப்புறம் எப்பவுமே வெளிய கொண்டுவந்ததில்ல. அந்த ரூம்ல ஒரு ஜன்னல் மட்டும் தான் திறக்கும், அந்த சின்ன வெளிச்சதுல நானும் டெட்ட்டியும் விளையாடிட்டு இருப்போம். அடுத்த விஷயத்த நான் உங்க கிட்ட எப்படி சொல்றதுனு தெரில. அப்பவும் சரி, இப்பயும் சரி, நான் இத யார்கிட்ட சொன்னாலும் யாருமே நம்ப தயாராயில்ல.
டெட்டி.... டெட்டி என் கிட்ட பேசுவான்...
-----------------------
(அறையில்)
டெட்டி, உனக்கு பேட்ட்ரி இருக்கா?
இல்லயே,
அப்புறம் எப்டி பேசுற?
தெரில.
சரி, இங்கயே இரு. நான் சாப்ட்டு வரன். உனக்கு பசிக்குதா? நான் உனக்கு இட்லி எடுத்துட்டு வரன். அங்க உன்ன கூட்டிடுபோனா, தம்பி கொஞ்ச நேரம் வச்சிக்கிட்டும்னு அம்மா உன்ன குடுத்துடுவாங்க. அவன் திரும்ப தரவே மாட்டான். நீ இங்கயே இரு.
-----------
(அறைக்கு வெளியில்)
அம்மா, எனக்கு இன்னிக்கு ட்டூ இடிலி வேனும். ஒன்னு எனக்கு, ஒன்னு டெட்ட்டிக்கு.
அதான பாத்தன், நான் கூட எங்க தம்பிக்கு தான் கேக்கபோறியோனு பாத்தன்.
அவனுக்கு தான் நீங்க இட்லிய மிக்ஸில அறைச்சு தரீங்க, நான் டெட்டிக்கு தரன். இவனுக்கு தான் பல் வந்துருச்சி இல்ல, கடிச்சி சாப்ட மாட்டானா?
ரெண்டு பல் வச்சிக்கிட்டு எப்டி சாப்பிடுவான்? நீயும் சின்னதா இருக்கும்போது அப்டி தான் தந்தன்.
சரி, எனக்கு ஊட்டி விடுங்கம்மா. ப்ளீஸ்.
ஊட்டி எல்லாம் விடமுடியாது, ஒழுங்கா உக்காந்து சாப்டு.
போங்க, நான் டெட்டி கூட சாப்டறன்.
போ, பெரிய மனுஷனாட்டும் போறத பாரு. ரூம்ல தனியா இருக்க பயமா இல்லயாடா?
அதான் டெட்டி இருக்கானே.
ஆமாம், டெட்டி தான் உனக்கு துண, இரு நானும் வரன்.
----------
(அறையில்)
டெட்டிக்கு வேற பேரு வக்கலயா?
டெட்டி தான், இந்த பேற புடிச்சிருக்குனு சொன்னான்.
சொல்லுவான், சொல்லுவான்.
வேனும்னா நீங்களே கேளுங்க. டெட்டி, உனக்கு இந்த பேரு தான் பிடிச்சிருக்கு?....
சொல்லு டெட்டி... டெட்டி, சொல்லு டெட்டி…
சரி, டெட்டி ஆமானு சொல்லிருச்சி.
இல்லமா, டெட்ட்டி தான் சொன்னான், இப்ப சொல்லமாட்டங்கிறான். டெட்டி சொல்லு டெட்டி
ஜீவா, பொம்மை எப்டி பேசும்? சாப்டு முதல.
இல்லமா, டெட்டி பேசுவான். என்கிட்ட பேசுனான்.
ஹ்ஹுஹுஹு,
பாரு, தம்பியே சிரிக்கிறான்.
ம்ம்ம், டெட்டி பேசுவான், இவன் இருக்கறதால தான் பேசமாட்டங்கறான், இவன வெளிய கூப்பிட்டு போங்க.
நீ அடிதான் வாங்கபோற, எப்ப பாரு தம்பிய வெளிய கூப்பிட்டு போங்கனே சொல்ற. இரு அப்பா வந்த உடனே சொல்றன். இப்ப எதுக்கு அழற?
நீங்க அவனயே பாத்துட்டு இருக்கீங்க....
அடி குடுக்கபோறன் பாரு.
ம்ம்ம், நீங்களும் போங்க, நான் டெட்டி கூட விளையாடனும்.... ம்ம்ம்....ம்ம்ம்...
உனக்கு அடி இல்லடா, அதான் இப்டி எல்லம் பேசுர.
---------------------------
(இரவு - அறையில்)
டெட்டி, நீயே சொல்லு, அவங்க எப்பவுமே அவன தான் தூக்கிவச்சிகிறாங்க. என்ன தூக்கிறதே இல்ல.
அப்டி இல்ல ஜீவா, அவங்களுக்கு நீயும் முக்கியம் தான்.
இல்ல.... சரி, நீ ஏன் அப்பவே பேசவே இல்ல. இப்ப மட்டும் பேசுற? போ. உன் பேச்சு காய். நீயும் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ற?
இல்ல, இல்ல, உனக்கு புரிய வைக்கிறன். நீ புரிஞ்சிக்கவேண்டியது நிறைய இருக்கு. போக போக புரியும்.
சரி, எனக்கு தூக்கம் வருது, குட் னைட்.
குட் னைட்.
நீ ஏன் அப்பவே பேசல அத சொல்லு.
(அறை வெளியிலிருந்து....) என்னப்பா, இன்னும் தூங்கலயா? என்ன தனியா பேசிட்டு இருக்க?
டெட்டி கிட்ட பேசிட்டு இருந்தன் பா.
சரி, தூங்கு.
அப்பா?
சொல்லுப்பா. (அப்பா உள்ளே வருகிறார்)
ஏன்பா, மத்த பொம்ம எல்லாம் பேசறதில்ல?
பொம்மைக்கு எல்லாம் உயிர் இல்ல, அதனால பேசுறது இல்ல.
அப்புறம் எப்டிபா? டெட்டி மட்டும் பேசுறான்?
ஹ்ஹ்ம், டெட்டி எப்டி பேசுவான்? அவனும் பொம்ம தான.
இல்லப்பா, டெட்டி பேசுறான். வேனும்னா பாருங்களேன். டெட்டி அப்பா கிட்ட பேசு.
ஜீவா, தூங்கு, காலில ஸ்கூலுக்கு போனுமில்ல?
இல்லப்பா, டெட்டி பேசுவான்.
ச், இந்த விதாந்டவாதம் தான் பேசக்கூடாது. வீட்டுக்கு வந்தாலே இதான். எப்ப பாரு தம்பி வேணாம் வேணாம்னு சொல்லிறியாமே, உன்ன வேனாம்னு விட்ருட்டுமா? சொல்லு. இங்க பாரு, இப்ப எதுக்கு அழற? ஸ்கூலுக்கு டைம்மாகுதில்ல? ஸ்கூலுக்கு டைமாகுதில்லங்கிறன் பாரு. காலில ஸ்கூலுக்கு போனுமில்ல. அழாம தூங்கு.
ம்ம்ம்...
----------------
அதுக்கு அப்பறம், பல முறை இதே மாதிரிதான், டெட்டி பேசுமுனு யாரும் நம்பல. டெட்டி ஏன் என் கிட்ட மட்டும் பேசுறானு புரியல. டெட்டிய பத்தி இப்படியே பேசிட்டு இருந்ததால, டெட்டிய வித்துட்டாங்க. நானும் அதெல்லாம் மறந்துட்டன். அப்புறமா எனக்கு தெரியவந்தது, அது என்னோட சித்தப்பா வீட்ல இருந்தது.
-----------------------
(சித்தப்பா வீட்டில்)
அப்பா, நம்ம டெட்டி மாதிரியே இருக்கில.
ம்ம்ம், மத்தவங்க பொருள் எல்லாம் எடுக்க கூடாது. கேட்டுட்டு தான் எடுக்கனும். சித்தப்பாவ கேளு.
சித்தாப்பா, டெட்டி கூட விளையாடுறன்.
சரிப்பா, விளையாடு.
-------------------
நான் டெட்டிய வெளிய எடுத்துட்டு போனேன், அப்ப...
------------
எப்டி இருக்க ஜீவா?
டெட்டி, நீ தானா? நான் அப்பவே நினைச்சன். அப்டினா, சித்தப்பாவ கேட்டுட்டு உன்ன கூட்டிடு போறன்.
வேணாம், என்னால உனக்கு பிரச்சன தான் வரும்.
அதெல்லாம் ஒன்னுமில்ல.
(வீட்டிலுருந்து...) ஜீவா, என்ன பண்ற? வா சாப்டலாம்.
சித்தி, வராங்க, இரு நான் சித்திக்கிட்ட கேக்குறன்....
.
.
.
சித்தி, இது என் டெட்டி தானா? நான் எடுத்துட்டு போட்டுமா?
சரி, எடுத்துட்டு போ. ஆனா, எப்ப பாரு டெட்டி பத்தியே பேசக்கூடாது. சரியா?
சரி, சித்தி.
அப்புறம், பொம்மை எல்லாம் பேசாது, சும்மா டெட்டி பேசுதுனு சொல்லிட்டு இருந்தினா, அப்புறம் அப்பாவும், அம்மாவும் டெட்டிய நிஜமா வித்துடுவாங்க.
இல்ல, சித்தி, பொம்மை எல்லாம் பேசுமா?
சரி, வா. சாப்ட போலாம்.
----------------
டெட்டிய ஒருவழியா, என்னோட வீட்டுக்கு எடுத்துட்டு வந்தன், சந்தோஷமா இருந்தன்.
ஆனா, டெட்டி என் தம்பியோட பொம்மையாட்டான். நான் சொன்னதெல்லாம், என் தம்பி சொல்ல ஆரம்பிச்சான். டெட்டி அவன் கிட்ட பேசுதுனு எனக்கு புரிஞ்சிச்சு. கொஞ்ச நாள் கழிச்சி அவன் டெட்டி கூட விளையாடுறத நிறுத்திட்டான், டெட்டி அவன் கூடவும் இப்ப பேசுறது இல்லனு புரிஞ்சது. டெட்டிய நான் திரும்பவும் கொண்டுவந்து என் ரூம்ல வச்சிகிட்டன்.
-------------------
கத எப்படி சார், இருக்கு?
நல்ல இருக்கு, குழந்தைங்களுக்கு பிடிக்கும். நல்ல அனிமேஷன் படமா வரும். பண்ணலாம்.
ரொம்ப நன்றி சார்.
தம்பி, ஒரு டவுட்.
சொல்லுங்க சார்.
ஏன் அந்த பொம்ம பேசுறத நிருத்திருச்சி? வளர்ந்திட்டதாலயா?
இல்ல, சார். பொய், பொய் சொன்னதால.
ஓ, சரி, அத இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க சொல்லுங்க. அப்ப தான் ரீச் ஆகும்.
ஒகே சார். நான் வரன்.
சரிப்பா. ஆல் தி பெஸ்ட்.
-----------------
(ஜீவா அறையில்)
டெட்டி, நம்மளோட கத அனிமேஷன் படமா வரப்போகுது.
சந்தோஷம். நீ சாதிக்கப்போற.
எல்லாமே உன்னால தான் டெட்டி.