சோர்வும் உயர்வும்
!!சோர்வும் & உயர்வும்!!
வீறு கொண்டு எழுந்திடு !!
வியர்வை சிந்தி உழைத்திடு !!
தடைகளை நீ தாண்டிடு !!
தவருகளை நீ திருத்திடு !!
கோபத்தை அழித்திடு !!
கொள்கையை நீ வகுத்திடு !!
காலத்தை நீ கணித்திடு !!
கற்பனையை நீ வளர்த்திடு !!
சோதனையை நீ தாங்கிடு !!
சோர்வை நீ தவிர்த்திடு !!
சிந்தித்து செயல்படு!!
சிறப்பாய் நீ வாழ்ந்திடு !!
உண்மைக்கு உதவிடு !!
உதவிக்கு தோள்கொடு !!
பொறுமையில் உயர்ந்திடு !!
பொறுப்பாய் உணர்த்திடு !!
தாய் தந்தையை மதித்திடு !!
தவறாமல் காத்திடு !!
கடவுளை வணங்கிடு !!
கடமையை செய்திடு !!
உறுதியா உழைத்திடு !!
உண்மையா உயர்ந்திடு !!

