கற்காலம் நோக்கி

கல்லாதவரும்
பொல்லாதவரும்
ஏட்டுச் சுரைக்காய்ப்
பட்டம் பெற்றோரும்

கூட்டாய்ச் சேர்ந்து
வெறித்தனத்தோடு
அறிவியல் துணையைக்
கையில் கொண்டு

கற்காலத்துக்கு
நம்மைத் தள்ளும்
முயற்சியில்
பதுஙகும்
பாயும் புலிகளாய்.

விழித்துக் கொண்டால்
புரிந்து கொள்ளலாம்
மயக்கத்தில் கிடந்தால்
மாய்ந்து போகலாம்.

கொண்டாட்டமும்
கும்மாளமும்
பேரின்பம் தருகின்ற
போதையாகினால்
நம்மை அழிக்க
நமக்கேன் பகைவர்?

எழுதியவர் : மலர் (22-Oct-15, 12:50 pm)
பார்வை : 88

மேலே