அகிம்சை காதல்
மறக்க சொன்னால் முடியுமா?
மரணத்தை வெல்ல முடியுமா?
காத்திருக்க சொல்லும் காதல் மடமையா?
காதலிக்கு காத்திருக்கும் கால்கள் கடமையா?
நீ விழி அசைத்தபோது மனிதனானேன்!
நீ விடை கொடுத்தால் பிணமாவேன்!
வாசம் வீசி அழைக்கும் மலரா நீ!
வண்ணம் பூசி அழிக்கும் மலரா நீ!
காதருகில் கவிதை சொன்னால் ரசித்தவன்!
கழுத்தருகில் கத்தி வைத்தால் மறுப்பேனா?
உந்தன் மடியினில் மரணத்தை அழைப்பவன் நான்!
உந்தன் மௌனத்தை உடைக்க மறந்தவன் நான்!
விட்டில் பூச்சிக்கு விளக்கே கதி - என்
விடாமுயற்சிக்கு விதியா பதில்!
விதி வெல்ல மதி நாடவா? - இல்லை
விடைபெற்று செவி சாய்க்கவா?
புல் இருக்கும் பாதையிலே முள் இருக்கும் நான் அறிவேன்!
பூவிதழ் உள்ளே முள் இருப்பதை யார் அறிவார்?
பூங்காற்றை புறக்கணித்து புயலுக்கு
பூமாலை சூடும் பூமி இது!
மன்னனை வென்று மகளை கைபிடித்தனர் பண்டையர்!
மாமனை வெல்ல மனதுக்கு வல்லமை தாராயோ!
அகிம்சை எனும் அன்புச்சொல்லுக்கு
அர்த்தம் சேர்ப்பாயோ!