கல்யாண ஊர்க்கோலம்
ஊரெல்லாம் விழா கோலம்
என் கல்யாண ஊர்கோலம்
என் தாயும்தான் ஓரத்திலே
ஆனந்த கண்ணீரிலே
என்னவனோ பக்கத்திலே
அவன்மனமோ சந்தோசத்தில்
என் நினைவோ சொர்க்கத்திலே
ஊர் கோலம் போகையிலே
ஊரு சனம் மெச்சுதடா
உறவுகளும் சொக்குதடா
ஊனமுள்ள என்னவனை
கைபிடிச்ச சந்தோசத்தில்