அன்பு மகளே உனக்காக இந்த கவிதை
எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ நீ
எனக்கு மகளாக பிறந்தாய்
ஒரு கோடி வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை
அழகு முகத்தில் கொண்டாய்
உந்தன் இலவம் பஞ்சு பாதம்
உதைக்க எந்தன் கர்வம் போகும்
முகத்தில் அம்மாவின் அழகை கொண்டாயே
அம்மா எந்தன் அம்மா
கனவில் காணாத புதையல் தந்தானே
பிரம்மா அந்த பிரம்மா
எல்லை காணாத பறவையின் சிறகில்
ஏறிப்பறப்பாயே வாழ்விலே
வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம் கூட எல்லை இல்லையே
பூமித்தாயே நிலவைபோலே உன்னை சுற்றி என் வாழ்கையே
நிலத்தில் நீ வாழ உரங்கள் போலாவேன்
செடியே மல்லி செடியே
நீ பூக்கும் நேரத்தில் மஞ்சள் நீராட்டி
மகிழ்வேன் நானும் மகிழ்வேன்
பூக்கள் நீ சூடி பாக்கள் நான் பாட
உந்தன் திருமணம் நடக்குமே
இறைவனே உந்தன் திருமணம் கண்டு
வியந்துபோகும் படி செய்வேனே
உன்னை பிரியும் அந்த நேரம்
நெஞ்சில் இடியுடன் மழையுந்தான்......