தேவதைகள் தூங்குகிறார்கள் - பகுதி 6 - லாவண்யா

தேவதைகள் தூங்குகிறார்கள் - பகுதி 6 - லாவண்யா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விஷாந்தினி தந்தை மிகப் பெரிய தொழிலதிபர் என்பதால் கடத்தல் செய்தி மின்னலென வெடித்து அடைமழையென அதிர்ச்சியாகவும் வேகமாகவும் பரவியது ...அந்நொடியில் தன் உயிர் மூச்சான மகளைத் தொலைத்து விட்ட மரண வேதனையில் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து கலங்கி நின்றார் சுந்தரம் ..மனைவியை இழந்த ஆறு மாதத்தில் வாழ்வே முடிந்ததென விரக்தியில் உடைந்த பின் ..மகள் விஷாந்தினி விண்ணில் உதித்த நட்சத்திரமென வியப்பான வாழ்வில் ரசித்து மூழ்க வைத்தாள் ..தன் உயிரும் பிரிந்தது ..உயிர் பரிசளித்த இதயத்தையும் இப்போது தொலைந்து விட்டோமென ...தன் மகளை தொலைத்ததற்கு நானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் குறுகி நின்று கொண்டிருந்தார் சுந்தரம் கவலையோடும் கண்ணீரோடும் ..

சுந்தரம் அழைத்த வேகத்தில் போலீஸாரும் வந்தனர்.. கோவையின் இன்ஸ்பெக்டர் மற்றும் சுந்தரத்தின் நண்பரான சிவா கடக்கவே முடியாத ஒரு பதட்ட நிலையில் தனது பணியைச் செய்ய ஆரம்பித்தார் ..குழப்ப சூழலில் கூட்டத்தை விலக்கி அங்கிருந்த சந்தேகமான சில நபர்களை விசாரித்து அவர்களின் முகவரிகளையும் , அலைபேசி எண்களையும் வாங்கும் செயலில் ஈடுபட்டார் ...

நான் மட்டும் அதே இடத்தில் நெஞ்சம் பிழிந்து புதைந்து கிடந்தேன் ..
"விஷா ....
காதலோடும் நட்போடும்
தொடர்ந்த வாழ்வை
சலனம் முடிவதற்குள்
சாம்பலாக்கி விட்டாயே ..."

என மனதில் எண்ணி எண்ணி இனம் புரியா நொடிக்குள் நகர்தேன் ....

சிவா வேகமாக வீட்டினுள் நுழைந்து விஷாந்தினி அறையை சோதனை செய்தார் ..அவள் உறங்கும் கட்டில் மெத்தைக்கு அடியில் நாட்குறிப்போடு ...புடவையும் இருந்ததைக் கண்டு ..அதை எடுத்து தனது பணியாளரிடம் கொடுத்து .....மேலும் ஆதாரம் திரட்ட அறை முழுக்க தேடி அலைந்தார் ..தன் கைபேசி அழைப்பில் வந்த மேலதிகாரியின் வேண்டுகோளுக்கு "சரிங்க சார் ..சரிங்க சார் " என்ற சிவா விரைவாக கீழிறிங்கி சுந்தரத்திடம் " இரவு பேசலாம் " என சொல்லி விட்டு வேகமாக புறப்பட்டார் ...

மனக் குழப்பத்துடன் தீர்க்க முடியா வேதனையில் வெம்பி வெம்பி துயர தீயில் வேகா கட்டையாக உள்ளம் உடைந்து மரண தேடலில் மரண வாசல் நோக்கி மகளை தேட முயன்ற விஷாவின் அப்பா...வாசலின் ஓரத்தில் நின்ற எனை நோக்கி வந்தார் ...அவரது பார்வைக்குள் எனை எங்கோ அவர் பார்த்த நினைவை திரட்டி முக பாவனை மூலம் வெளிபடுத்த முயன்றார் ...நான் அறியாத ஒருவன் போலவே நின்றேன்...

அவருள் எழுந்த கேள்விகள் அவருக்கே புதிராய் அமைந்திருக்கும் ...அவர் அருகில் வர வர ..சற்று பயந்தும் மனதுள் வியந்தும் எனது வீட்டை நோக்கி விரைந்தேன் ..வீட்டினுள் நுழைந்ததும் ....அம்மா "என்னாச்சி டா...இவ்ளோ வேகமா வர .." என்றாள்..."ஒரு சின்ன பிரச்சன மா நா அவரசமா சென்னை போயிட்டு வரேன் ..கொஞ்சம் பணம் கொடு ..தம்பி எங்க போனான் "என்றேன் ...அம்மா உடைந்த மனதோடு "என்னடா ..என்ன பிரச்சன ..இப்பவே சொல்லு .."என்றாள் ...நானோ இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பமின்றி ,"போயிட்டு வந்து சொல்றேன் மா ..பயப்படாத அப்பாகிட்ட வேல விசியமா போயிருக்கேன்னு சொல்லிடு ..தம்பி வந்தா எனக்கு போன்ல கூப்ட சொல்லு "..என சொல்லிவிட்டு வேகமாக சென்று அடுத்த சென்னை ரயிலை பிடித்தேன் ...

அடுத்த நிமிடம் ..ஆதிக்கு அழைத்து , நடந்ததை விவரமாகச் சொல்லி ...விஷாந்தினி பற்றிய விவரம் கிடைக்க சுந்தரத்தை பின்தொடர சொல்லி அழைப்பைத் துண்டித்தேன் ..சற்று நிதானத்தோடு சலனமாக்கியவளை சல்லடையிட்டு தேடவே தொடக்க அமைதியென அந்த நிதானம் ...

சுந்தரம் பெரும் மனக்குழப்பத்தில் ஈரோட்டிலுள்ள தம்பியின் மீதுள்ள சந்தேகம் தீர்க்க , சிவாவிடம் குடும்ப விவரம் முழுதும் தெரிவித்து மகளை தேட வெண்ணிற மாருதியில் புறப்பட தயாரானார் ..தன் நண்பனுக்கு ஒற்றன் வேலை செய்து வந்த ஆதி , பனிக்கட்டி மழையை எதிர்பார்க்கும் பெரும் வறட்சியைப் போல , எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் ..எதிர்பார்த்த நொடியில் சுந்தரம் மகிழுந்தை விரைவாக செலுத்தினார் ..

விஷா ..விஷா ....விஷாந்தினி என தன்னுள் விசும்பி விசும்பி அழுதார் சுந்தரம் ..தொழில் தொழில் என ..அன்பு மகளை அரவணைக்க முடியாமல் ..அவளை பிரித்து மரண வலியை கொடுத்தது யாரோ ..? அவளின் நிலை என்னவென தன்னுள் கதறி அழுதவாரே ஈரோட்டை நோக்கி விரைந்தார் ..

விஷா...ஒன்றும் புரியாமல் ..எங்கே உள்ளோம் என்று கூட தெரியாமல் ...பார்க்க முடியாதபடி கண்களை கட்டி , கைகளை இடையோடு இழுத்து கட்டிய நிலையில் , எங்கும் செல்ல இயலாதவாறு ஓர் அறைக்குள் அடைந்துக் கிடந்தாள் ..தன் காதலை , காதலனை கண்களோடு அணைத்து வாழ்ந்தவள் , அனைத்தும் இழந்து அடைக்கலமற்று அழுதவள் ..தந்தையை தவிக்க விட்டுவிட்டோம் என உடைந்தவள் , தாய் விசாலாட்சியை மனதில் மானசீகமாக எண்ணி, நடந்த துயரம் போக்க கட்டுண்ட கண்களில் நீர் ததும்ப தந்தையின் ஆழமான அன்பை நினைத்து வெம்பினாள் ....காதலன் விஜி... தான் கொடுத்த ரகசியத்தை கண்டறிவான் எனும் உறுதியோடு , தான் விஜியிடம் சொல்லாமல் மறைத்தமைக்கும் மனதளவில் மன்னிப்பு கோரினாள்..

" கண்ட காதல் காமம் அல்ல
கண்ணோடு இணைந்த காவியம்
கரைக்க இயலாத காவியமென
கண்ணனோடு உயிர்த்த காதல்
கரையாது காலத்தால் .."

காதலன் கண்ணுறங்காமல் தான் கொடுத்த தடயத்தை வைத்து விரைவில் வந்து மீட்டு செல்வான் என்ற நம்பிக்கை அவளிடம் அதிகமாகவே இருந்தது ..மனதை கல்லாக்கி காத்திருந்தால் ..ராமனுக்காக காத்திருந்த ஒரு சீதை போல ...

காதல் ...கடக்க வைக்கிறது ..கவனிக்க வைக்கிறது ...பார்ப்பதை எல்லாம் உற்றுப் பார்த்தேன் ...தேடல் அதிகமாக அதிகமாக ஊடுருவி பார்த்தேன் ...அமர்ந்த இடம் பழகிய இடமென உணர்ந்தேன் ...ஆம் ..நான் அன்று ஜப்பான் மூக்கழகியை ரசித்து கொண்டே பயணித்த அதே ரயில் அதே பெட்டி. . நீண்ட குழப்பங்கள் பின்னோக்கி சுழன்றது...தேவதையின் தூக்கத்தை நினைவுகளோடு சுவைத்து கொண்டே நம்பிக்கையோடு நிமிர்ந்தேன் ..ஜப்பான் மூக்கழகி சத்தமில்லாமல் மனதை சலனமாக்கி , சாந்தமடைய செய்தவள் .ஒவ்வொன்றாய் உயிர் விட அவள் கொடுத்த எஸ். சி .டீ. சி பஸ் டிக்கெட் எனது உள்ளங்கையில் புதிருக்கு துளிர் வைத்தது ...அதில் அவளின் கைபேசி எண்ணோடு இன்னும் சில விவரம் ...ஒரு புதையல் போல திரண்டு நின்றது விழி முன் .. அதில் V-I-S-A-M என எழுதி ..அதற்கு கீழ் அவளது கைபேசி எண்ணை எழுதியிருந்தாள்...அந்த கைபேசி எண்ணிலும் சில எண்ணை மட்டும் அடிக்கோடிட்டிருந்தாள்
...அந்த எண் : 3-4-5..மேலும் முதல் இரண்டு எண்ணிற்கும் இடையில் YANI என எழுதி அதை முழுதும் அடித்திருந்தாள்...

ரயில் பயணம் முடிந்து ..ரயிலை விட்டு இறங்கி, விழி முழுக்க காதலி நினைவே நிறைந்து பெரும் கலக்கத்தில் கால் தளர்ந்து , ஒரு அரை பைத்தியம் போல 3-4-5 என்ற கடைசி எண்ணை உற்று நோக்கி நடைபாதையில் நடந்தேன் ....அப்போது ஆதி எனது கைபேசி அழைப்பில் ...பூமியை திருப்பி சுழற்றியது போல மீண்டும் ஓர் அதிர்ச்சியை அவனிடமிருந்து ...விஷாந்தினியின் அப்பாவிற்கு பெருந்துறை அருகே விபத்து ஏற்பட்டதென கூறினான் ஆதி ..

நிலை தடுமாறி ரயில் போகா தண்டவாளத்தில் அமர்ந்த நொடியில் சுயநினைவை இழந்து கிடந்தேன் ..எனை கடக்க முயன்ற வயது நிறைந்த ஒரு தாத்தா எனது தோளில் புத்தகப் பையோடு தொப்பென்று விழ சட்டென சுய நினைவிற்கு திரும்பினேன் எனது இதயத் திருடியை மீட்க .." என்ன தாத்தா இவ்வளவு எடையைத் தூக்கி செல்கிறீர் ..மெதுவாக செல்ல வேண்டியது தானே " என சொல்லி கொண்டே அவரின் புத்தக பையை தூக்கி தருகையில் எனது கையேடு ஒரு காகிதம் ஒட்டி கொண்டது ...அக்காகிதத்தில் 3-YANI-4-5 என்ற வார்த்தை மிக அழுத்தமாய் என் விழிக்குள் விழ ....புது புதிருக்கு எல்லா பதிலும் உள்ளங்கையில் நின்றது ...மர்ம முடிச்சை அவிழ்ப்பது போல அந்த எண்களுக்கு இடையே உள்ள தொடர்பை அறிய ஆங்கிலம்
உதவியது ...3 என்ற இடத்தில் ஆங்கில அகர வரிசை படி C என்ற எழுத்தையும், YANI அப்படியே வைத்து கொண்டு ...4 என்ற இடத்தில் D யையும் ...5 என்ற இடத்தில் E யையும் தொடர்ப்பு செய்ய ...எனக்கு கிடைத்த வார்த்தை CYANIDE ....எல்லாம் புரிந்தது இப்போது ...

CYANIDE ஒரு VISAM ...

சென்னையில் உள்ள ஒரே ஒரு CYANIDE கம்பனிக்கும் விஷாந்தினி அப்பாவிற்கு தொழில் ரீதியான பிரச்சனை இருந்ததை ஒரு முறை மறைமுகமாக விஷா என்னிடம் சொல்லிருக்கிறாள் ...இந்த பிரச்சனை பற்றி பேசவே அன்று விஷாவும் அவளின் அப்பாவும் சென்னை வந்திருக்க வேண்டும் ..

முதல் முத்தம் கொடுத்ததும் ...காமமற்ற காதலில் புதியாதாக பிறந்த உணர்வு மீண்டும் பிறந்து வளர்ந்தது ..யுகம் கடக்கும் நொடி முழுக்க சதம் அடித்த வெற்றிப் போல் , சென்னையில் உள்ள ஒரே ஒரு 3-YANI-4-5 கம்பனியை தேடியவாறு ...VISAANTHINI...3-YANI-4-5....மற்றும் VISAM இவற்றை நினைத்து நினைத்து கிடைத்து விட்டாள் எனது காதலியென ...அவளின் மருதமலை முத்த மழையை ரசித்துக் கொண்டே ...அந்த கம்பனியை அடைந்து அவளை பற்றி விசாரிக்காமல் கம்பனி பற்றிய செய்தியை சேகரித்து , எனது மனம் திருடிய கள்ளியே உன்னை கண்டுப்பிடித்தேனடி என் கண்ணம்மா ....என்று உள்மனதில் நினைத்து கம்பனியின் உள்நோக்கி அவளைத் தேட ஆரம்பித்தேன் ...

வானத்து மீன்களுள் - சிறு
மணிகளைப் போல்
மின்னி மின்னி நிறையும்
அவளின் முக நாணத்தை
அருகில் நின்று ரசிப்பதுப் போல
ஆழ்மனதின் அசரீரி
அருவியென வீழ்கிறது என்னுள் ..

விஷா - வின் மனதில் .. விஜியின் விரல் நுனி ஓர் வீணை வாசிக்கும் பனித்துளியென பரவி கிடந்தது ..அவளுக்குரியவன் அவள் அருகில் உள்ளான் எனும் அறிகுறியை மனதில் உணர்ந்தாள்....
"நாவிற்கு துணிவில்லை... உண்மை நாமத்தை வெளிப்பட உரைக்க ..யாவருந் தெரிந்திடவே .." எனும் பாரதியின் சொல் அவளுள் எழும்பி பயமில்லை பதட்டமில்லை என்றவாறு ...

மூர்த்திகள் மூன்று , பொருள் ஒன்று - அந்த
மூல ப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று ....

என சொல்லிக் கொண்டே அவளுக்குள் வீரத்தை விதைத்து வைத்தாள் ...

இனி ......இருவரும் இணைவார்கள் .....

தொடரும் ....

- லாவண்யா



~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேவதைகள் தூங்குகிறார்கள் கதையின் adththaduththa பாகங்களை எழுத விரும்பம் உடைய நண்பர்கள்.. நண்பர் ....கவிஜியை விடுகை
மூலம் தொடர்பு கொள்க...

~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : லாவண்யா (7-Nov-15, 12:02 pm)
பார்வை : 215

சிறந்த கவிதைகள்

மேலே