கட வுள் அதாவது உள் மறைந்து இருப்பவன் என்று அர்த்தம்
கடவுள் என்ற பெயரிலேயே நாம் உட்பொருளை அறிய முடியும்.
கட வுள் அதாவது உள் மறைந்து இருப்பவன் என்று அர்த்தம். அதாவது நம்முள் மறைந்து இருப்பவன்.
கடவுள் இங்கும், அங்கும்,எங்கும் வியாபித்து,உருவாய்,அருவாய்,திருவாய் ஆக எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள். இந்த பிரபஞ்சம் முழுதும் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள்.உயிர் சக்தி,உணவு சக்தி,மூல சக்திஎன்று நம்முள்ளும்,ஈர்ப்பு சக்தி,மின் காந்த சக்தி என்று பிரபஞ்சத்திலும் எல்லாம் சக்தி மயம்.
பிரானன் என்னும் சக்தி இருந்தால்தான் மனிதன் இல்லை என்றால் பிணம், அது போல கடவுளும் சக்தி இருந்தால் தான் கடவுள், இல்லை என்றால் கல்தான். இந்த சக்தியை முறைப் படுத்தி ஓர் இடத்தில் குவித்து, நம்முள் குவிக்கும் ஆன்மீக சக்தி மையம் தான் கோவில்.
பிரபஞ்ச சக்தியை உள் இழுத்து வாங்கி தன்னுள் பெருக்கி, நமக்கு அளிக்கும் இடம்தான் கோவில். அது போல சக்திகளை வசிகரிக்க செய்ய முறைப்படி உருவாக்கிய சம்பிரதாயம் தான் கோவில் கட்டுமான சாஸ்த்திரங்களும் கோபுரங்களும். நாம் கோவிலாகக் கட்டுவேம்.
அதே முக்கோண பரிணாமத்தை எகிப்தியர்கள் பிரமீடாய் கட்டினார்கள். இது மட்டும் இல்லாமல் மக்கள் கூட்டமாய் வழிபடும்(பள்ளிவாசல்,தேவாலயங்கள்) பஜன், மற்றும் தியானம் செய்யும் இடங்களும் சக்தி மையங்களே. ஏன் என்றால் எண்ணற்ற மனிதர்களின் எண்ண அலைகள் அங்கும் ஒரு சக்தி மையத்தை உருவாக்கின்றன.
இப்படி கோவிலைக் கட்டிய மனிதன், பின்னால் அந்தக் கோவிலில் ஒரு சக்திக்கு உருவகமும் கொடுத்தார். அதுதான் கடவுள் சிலை. இந்த சிலை சக்தி மண்டலத்தினுள் இருக்கும் சக்தியை தன்னுள் கிரகித்து வெளிப்படுத்துவதால், நாம் பிரார்த்தனைகள் மூலம் அவரில் இருந்து சக்தியை நாம் கிரகிக்கின்றேம்.
கருட கம்பமும், மூல ஸ்தானம் மட்டுமே சக்தி மையங்கள். ஏன் என்றால் கருட கம்பம் அடியில் மணிகளும்,பென்னும் போட்டு சக்தியை கிரகிக்கும். மூல ஸ்தானம் முக்கோண கோபுரத்தின் அடியில் இருப்பதால் அங்கும் பெரும் சக்தி கிரகிகப் பட்டுச் சக்தி மையமாக இருக்கும்.
இந்த இரண்டு இடங்களிலும் சக்தி அலை அல்லது வைபரேஷன் அதிகமா இருக்கும். ஆனால் தஞ்சையில் இருக்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நுழையும் போதே நமது மனம் வைபரேஷனை உணரத் தொடங்கும். இவை சக்தி வாய்ந்த கோவில்கள் என்று அழைக்கப் படும்.
.rk...