மருமகளும் மகளும் ஒரே லட்சணம்தான்பாவம் யா ஆண்பிள்ளைகள்

நீண்ட நாளுக்குப் பின்,
தன் இளவயது தோழியை சந்தித்த பெண் கேட்டாள்,

"எப்படியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்?"

"அதை ஏண்டி கேக்குற? ...என் மகனுக்கு வந்து வாய்ச்சவ படு சோம்பேறி ... காலையில் 11 மணிக்குத்தான் எழுந்திருப்பாள் ... வேலைவெட்டி எதுவும் செய்றதில்லை ... நாள் முழுக்கக் கடைத்தெருவெங்கும் சுத்தி என் பையன் சம்பாதிக்கிற பணத்தை செலவழிச்சி நாசம் பண்ணுவாள்"

"அப்படியா?"

"ஆமாடி … அது மட்டுமல்ல, என் மகன் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வர்றப்போ ஒரு காப்பி தண்ணிகூட போட்டுக் கொடுக்க மாட்டா ... சமையலும் பண்றதுல்ல ... எப்ப பாரு ஹோட்டல் சாப்பாடுதான் ... வீட்ல சோறு கூட சமைக்கலைன்னா அவள் என்ன பொம்பள?"

"ச்சே... என்ன வெட்கக் கேடு! சரி விடு. உனது மகள் எப்படி இருக்கிறாள்?"

"அவளுக்கென்னடி ... அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி. என் மருமகன் ரொம்ப தங்கமானவர். என் மகள் காலையில் எழுந்திருக்கும் முன்னரே எழும்பி காலை உணவைத் தயாரித்துவிடுவார். என் மகளுக்கு படுக்கையிலேயே காப்பி கொடுத்துவிடுவார். தினமும் என் மகள் விரும்புறத வாங்குறதுக்கு பணம் கொடுத்துவிடுவார். அது மட்டுமல்ல, ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் விதவிதமா சப்பாடு வாங்கிக் கொடுப்பார் ... கொடுத்து வைத்தவள் என் மகள்"

".....!!?

எழுதியவர் : செல்வமணி (16-Nov-15, 10:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 402

மேலே