தேடல்

✨ வாழ்க்கையில் தன்னை ஒரு தோல்வியடைந்தவனென்றே அவர் கருதிக்கொண்டார். "நான் இந்த உலகில் பிறந்திருக்கவே கூடாது" என்று தன் வீட்டிற்கு கடிதம் கூட எழுதினார். பட்டதாரிப் படிப்பை முடிக்கும் நிலையில், அவரது பேராசிரியர்கள் 'தரமற்ற மாணவனான இவனுக்கு எங்கும் வேலை கிடைக்காது' என்றே நினைத்தார்கள். அது போலவே, அவருக்கு எங்கும், எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால், வீடு வீடாகச் சென்று இன்ஸுரன்ஸ் பாலிஸிகளை விற்பனை செய்து வந்தார். இறுதியாக நண்பர்களின் உதவியால், மிகவும் குறைந்த வருமானத்தில் 1902 ல்  சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில்  தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிமை" விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலையாக இருந்தது.
இந்த வேலையில் சேர்ந்த சில மாதங்கள் காப்புரிமை உரிமைக்காக வரும் புதிய கண்டுபிடிப்பு தகவல்களை வேலையின் நிமித்தமாக, சாதாரண வாசகனாக படிக்க தொடங்கினார்... அவரின் அறிவியல் மூளை கொஞ்சகொஞ்சமாக விழிக்க தொடங்கியது, இவ்வாறே சில மாதங்கள் கழித்து அறிவியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் அளவுக்கு புரட்சிகரமான சிந்தனைகளுடன் சீறியபடி வெளியே வந்தார்..
.....
அவர் தான் உலகின் தீராத அறிவியல் கருத்துகளுக்கெல்லாம் விடை தந்த "சார்பியல் தத்துவத்தை கொடுத்த ஒப்பற்ற விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்"
...
"மனதின் ஆழமான தேடலால் தான் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானியின் இடத்தில் கம்பீரமாகவும் அமர்ந்திருக்கிறார்.. ஆனால் அவரின் உன்னதமான அகத்தேடலை புரிந்து கொள்ளாமல் ஐன்ஸ்டைன் மூளையை பத்திரமாக பாதுகாத்து இவர் எப்படி யோசித்தாரயென்று புறத்தேடலில் ஆராய்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய விஞ்ஞானம்!!!
...
"உன்னதமான தேடல் உள்ளவர்களே உயர்ந்த இடத்தை விரைவாக அடைகிறார்கள்.

" தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும் ..
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.."

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (18-Nov-15, 10:38 am)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : thedal
பார்வை : 306

மேலே