கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்.....
-------------------------------
காண காண இன்பம் தரும் தீபம்
இருள் நீக்கியே நமை காக்கும் தீபம்
வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த தீபம்
தீமை தனை விரட்டிவிடும் இந்த தீபம்
கார்த்திகை மாதத்தில் ஓடி வரும் தீபம்
காரிருளையும் ஒளி பெற செய்யும் தீபம்
மங்கையர் மனதிற் உகந்த தீபம்
மாசிலா கண்ணனை அழைத்து வரும் தீபம்..
சிறு சிறு துன்பத்தையும் தடுக்கும் தீபம்
சிறப்பாய் வாழ அருள் தரும் தீபம்...
இன்பம் பொங்கட்டும்
ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி