ஊடக நற்பயன்
ஊடகங்கள் வரக் காரணமா அல்ல வளரக் காரணமா ? எது வேண்டும் ?
ஊடகத்தின் பயன்களைப் பட்டியல் இடுக --சிநேகிதியர் ஜான்சி ராணியின்
கேள்வியில் நகைச் சுவையுடன் சொன்ன பதில்
---திருவிளையாடலில் சிவபெருமான் அவ்வையாரிடம் "ஔவையே சொற்றமிழால்
எமைப் பாடுக" என்று கேட்டமாதிரி ...
ஔவையார் எப்படிப் பதில் சொல்கிறார் பார்ப்போம் :
ஒன்றானது உருவில் DD என்று உருவானது
இன்று பலவானது மல்டி சேனல் என்று பலவானது
திரைப் படமானது கிரிகெட் களமானது
அர்த்த ராத்திரியிலும் செய்தி சொல்லும் தளமானது
24 மணி நேரமும் துயிலாதது
இரவென்றும் பகலென்றும் இல்லாதது
தொலைக் காட்சி என்றே பெயர் போனது
தொல்லைகளுக்கே நிரந்தர இடமானது
சோம்பேறிகளின் சொர்க்க பூமியானது !
சிவபெருமான் : இதனால் நற்பயன் ஒன்றும் இல்லையா ஔவையே ?
ஔவை :நற்பயன் தருவது நமசிவாய எனும் நாமம் ஒன்றுதானே என் ஐயனே !
இந்தக் கிழவியிடம் கேட்டால் .......இதை மூடிவைத்தால் அதுதான் நற்பயன் !
----அன்புடன், கவின் சாரலன்

