காதலை மறக்க‌

அழுகையின் ஈரம்
அணையுமுன்
எனை
அணைத்துக்கொள்!

கோபத்தில்
இதழ்களின்
படபடப்பை
விழிகளால் விழுங்கு!

நோயில் மருந்து
தேடுவதை மறந்து
மையலால்
மருந்துசெய்!

நகங்களை இமைகளின்
மேனியில் நகர்த்த்தி
உயிருக்குள்
உயிர் சுரக்கச்செய்!

தேனீருக்கு பதில்
முத்தங்களோடு
அதிகாலையை
முடிக்க‌ பழகு!

ஒரு பிடியேனும்
ஊட்டிவிடு
உதட்டோரத்தில்
ஒட்டியதை மட்டும்
உறிஞ்சியெடு!

கண் அசைவுகளில்
என் வெட்கங்களை
கட்டியிழுத்து_உன்
புன்னகைக்குள்
தொட்டிலிடு!


பனியிரவில்
மூச்சுக்காற்றால்
என் தேக தேசத்தில்
பணிசெய்!

உன் உயிர்
குழைத்து_என்
உணர்ச்சிகளில்
ஊற்றி உறையவிடு!

முத்த திருடா!
செத்தவளை
சேர்ந்தவனே!
இத்தனையும்
ஒற்றைநாளில்
செய்துமுடி

முதல்காதலனை
முத்தங்களால்
வெளியேற்றி!
முதல்காதல்
நினைவு மூச்சை
முரட்டன்பால்
மூழ்கச்செய்

மாதம் ஒரு
முறையேனும்
நீ மனைவி
நான் கணவன்!

உன் முதல்காதல்
மறந்துபோக‌
மனைவியாய்
என்ன செய்ய
நான்?????????????

எழுதியவர் : புலவூரான் ரிஷி (3-Dec-15, 8:57 pm)
பார்வை : 371

மேலே