தலைகுனிகிறேன் இன்று

சென்னை வெள்ளம் ஊருக்கு நீரை தந்ததோ இல்லையோ..
மக்கள் கண்ணில் கண்ணீரை தந்தது,,
கண்ணீரின் வினையால் கண்ணையும் திறந்தது..
விண்ணை பிளக்கும் மழையின் முழக்கத்திலும்,,,
மனதை திறவா மனிதரையும்...
மனிதநேயமுள்ள மானுடனையும் .
கண்ணீர் திரண்ட கண்ணுக்கு காட்டியது..
இனியாவது மதத்தால் இனத்தால் மொழியால் வேறுபடாதே மானுடா..
மனதை மட்டும் பார் ...
மதத்தை அல்ல..