வெள்ளம் உணர்த்தும் பாடம் - மண்டையில் உறைக்கட்டும்
இயற்கையை நோண்டிப் பார்த்தோம்;
இயற்கை நம்மை சீண்டிப் பார்த்துவிட்டது..!
நீயா? நானா? என்று வாதமிட இது நேரமில்லை…
தாயா(ய்) சேயா(ய்) சேர்ந்து செயல்படும் தருணமிது!
கங்கை காவிரியை இணைப்பது ஒருபுறம் இருக்கட்டும்
இருப்பெரும் கட்சிகள் இணைந்து செயல்பட்டாலே
பாதிப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும்! மீதிப் பிரச்சனைகளை
மோடியிடமும் சோனியாவிடமும் முறையிட்டு தீர்க்கலாம்!
மாவட்டங்களில் அந்நியாய ஆக்ரமிப்புகள் எங்கெங்கே..?
கோட்டாச்சியர்களே குப்பைகளை சீண்டி கிளருங்கள்.!
ஆக்ரமிப்பில் நியாயங்கள் இருந்தால் கருணை காட்டுங்கள்
அந்நியாயம் என்று அறிந்தால் தயவு தாட்சண்யம் காட்டாதீர்கள்!
காவல்துறையே அணியணியாய் அணிவகுத்து வாருங்கள்
அண்டங்காக்கைகள் கரைவேட்டிகளை மடித்துக்கொண்டு மல்லுக்குநிற்கும்,
கட்சி பாகுபாடின்றி முட்டிகளைப் பெயர்த்து அடித்து விரட்டுங்குள்!
சட்டத்துறையே சட்டத்தை சரிவர பயன்படுத்துங்கள்
எதிராக வழக்காடும் வக்கீல்களையும் சேர்த்து
ஜாமீனில் வெளிவரமுடியாத உத்தரவு பிறப்பியிங்கள்!
ஆக்ரமிப்புகளுக்கு துணைப்போன அதிகாரிகள் யார் யார்?
அதற்கு அடித்தளமிட்ட அரசியல்வாதிகள் யார் யார் ?
சிபிஐ-க்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டே ஆணையிடு..!
மார்கழி மாதம்போல் மந்தமாக இருக்காமல் - மடக்கிய
பினாமி நிலங்களை முடக்கி - பாதிக்கப்பட்டோருக்கு மானியமாக வழங்கு..!
இருப்பெரும் கட்சிகளே இலவசங்கள் இனி வேண்டாம்;
இலவசத்துக்காகும் காசுகளை இன்ஃப்ட்ராஸெட்ரச்சருக்கு செலவிட்டு
இயற்கையின் சீற்றங்களை இரும்புக்கரம்கொண்டு அடக்க
வலுவான அடித்தளத்தை நீண்ட ஆண்டுகள் நீடிக்கும்படி
நேர்த்தியாக திட்டமிட்டு சாமர்த்தியமாக செயல்படுங்கள்!
நீங்கள் புத்திசாளிகள் என்றால் - திருந்த இதுவொரு நல்வாய்ப்பு,
நீங்கள் புத்தியீலிகள் என்றால் தமிழகத்துக்குத்தான் பேரிழப்பு…!