தமிழின் தலைநகரத்துச் சொந்தங்களே

இயற்கையின் ஆனந்தத்தில்
மலைகளோடும்
மாநகரத்து மாடங்களோடும்
மரம் செடி கொடிகளோடும் விளையாடி
தானியங்களை, பூக்களை, தேனை, கனிகளை கவா்ந்ததோடு
களைத்துப் போன பேரானந்தத்தின் பரவசத்தில்
காலமழைத் தூரலின் சங்கமம் இளைப்பார இடம்தேடி
இரவு விடிய பகல் முடிய
கணந்தோறும் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறது
வழியில்லாத மாநகரத்து வீதிகளில் அகப்பட்டு !
வறண்டதும் நீரற்றதுமான நன்நிலங்களில்
வாழ்பவா் வாழ்வதற்காக நம் முன்னோா்கள் செய்த
ஏாியும் குளங்களும் காட்டாற்று வெள்ளத்தை
முந்நீரோடு ( கடல் ) சங்கமிக்காமல் முடிந்தவரை சுமக்கிறது
முடியவில்லையென்ற புலம்பலில்.
இடைவெளியற்ற மாநகரத்து வீதிகளில் இடா்படும்
தமிழின் தலைநகரத்துச் சொந்தங்கள்
போதுமென்ற பொன்மனதோடு
வருணபகவானை வாழ்த்தி வழியனுப்ப
குருதிவடித்துக் குரல்கொடுக்கின்றனா்.
உறவுகளே உங்களுக்கு உதவ
இனியாவது எனக்கும் கொஞ்சம் இடமளித்து வாழுங்கள்
இப்படிக்கு ஒரு இயற்கையின் கண்ணீா் !!!

எழுதியவர் : மு.செல்லமுத்து (5-Dec-15, 4:56 pm)
சேர்த்தது : முசெல்லமுத்து
பார்வை : 90

மேலே