என்னை தொடரும் உன் நினைவுகள் 555

உயிரே...

நாம் ஓடிவிளையாடிய
ஆற்றங்கரை..

நீ தடுக்கி விழுந்த
வயல்வெளி...

நான் உனக்கு முதன்முதலில்
பரிசளித்த பருத்தி பூ...

நான் ஊஞ்சல் அடி விழுந்த
ஆலமரவிழுது...

நம் நினைவுகள் என்னில்
ஏதும் மறையவில்லையடி...

என்னோடு நீ இருந்த போது
உன்னை மட்டும் நேசித்தேன்...

நீ என்னை பிரிந்த
நாள் முதல்...

உன் நினைவுகளை
நேசிக்கிறேன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-Dec-15, 7:27 pm)
பார்வை : 573

மேலே