காதல் வலி

கடைக்கண்ணில்
ரகசியமாய்
ஒரு சரி பார்ப்புடன்..

யாரும் அறியாமல்
கண்ணீரில் கலையும்
பிம்பங்களை
பார்ப்பது போல்
ஒரு பாவத்துடன்...

வலி
என் வாழ்க்கையின்
வழியாக..

நடு நிசியில்
பேயாகவும்
கடந்து வந்த பாதைகளில்
நாயாகவும்

அலைகிறேன், திரிகிறேன்..
தனியே, தன்னந்தனியே...
யாருடனும் பகிர முடியாமல்....

எழுதியவர் : செல்வமணி (29-Dec-15, 9:43 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 389

மேலே