பரிணமிக்காத பாட்டி கதை

ஒவ்வொரு
முறை
சோறூட்டும் போதும்
பாட்டி கதை
சொன்னாள்....

வேலியில் ஓடும்
ஓணானை காட்டி....

நன்றிக்கு
நாய் காட்டி,
நாயிக்கு சோறிட்டு,

பாசத்துக்கு-உதாரணமாய்
பசுவும், கன்றும் காட்டி..,

நீளமாய்
முடி வளர
காக்காய்க்கு சோறிட்டு,

நிலாவில்
ஒரு பாட்டி
வடை சுட்டு விற்பதாய்
விதவிதமாய்
கதை சொன்னாள்....

எல்லாம்
அறிவியலின்
அசுர வளர்ச்சியில்
ஆக்கிரமித்து கொண்டன...
இப்போது
பாட்டியும்,பேதியும்
வேறு வேறு இடத்தில்..

பாட்டியோ...
முதியோர் இல்லத்தில்

பேத்தியோ...
கம்ப்யூட்டர் வெப்பத்தில்
அடைகாக்கும்
முட்டையாய்...
யூ-டியுப் கதைக்காக....

அறிவியல்
ஆட்டி படைத்தது.....
பாட்டிக்கு மாற்றாய்
யூ-டியுப்....,
கூட்டு குடும்பத்தை
குறுக்கி
நியுக்ளியர் குடும்பம்.....

ஆனால்,
பாட்டி கதைகள்
மட்டும்-பரிணமிக்காமல்
இன்னமும்
யூ-டியுப்பில்......!

எழுதியவர் : ஆ.க. முருகன் (2-Jan-16, 11:59 pm)
பார்வை : 53

மேலே