தாரை தப்பட்டை - இசைஞானிக்கு
வான் சிந்தும் மழையோசை இசையாகும்....
மண்மீது பூங்காற்றும் இசையாகும்...
உயிரோடு உறவாடும் உன் நாதமே- என்
உயிரைவருடும் உன்கீதம் உன்னதமே...
உன் ஆதார சுருதியிலே
ஊன் உயிரைக் கரைதிருப்பேன்...
தாளத்தின் லயங்களிலே
நூறுமுறை பிறந்திருப்பேன்...
தாலாட்டின் இனிமையிலே
என்னுயிரைத் துறந்திருப்பேன்...
உன் உயிர்தடவும் சுரம்தனிலே
இவ்வுலகை மறந்திருப்பேன்...
மண்ணோடு வேர்களும்
பிணைந்திருக்கும் நன்றாய்...
என்னோடு உறவாடும் - உன்
இசைகூட என்தாய்....