ஊருக்கு ஒருவர் - ஆனந்தி

இவர் -
இருளில்வீசியடித்த மின்னல்
அந்த விநாடி வெளிச்சத்தில்.
மேலே
வானம் மட்டுமல்ல
கீழே உங்களின்
தொலைந்து போன தடங்களும்
கலைந்து போன இலட்சியங்களும் கூட
தெரியலாம்....
ஆமாம் வாழ்ந்தவர்களை பற்றி
சொல்வது
வாழ்ந்துகொண்டிருப்பவர்களை
வழி நடத்தத்தானே ....


கோட்டைகளை பற்றி எழுதியவர்கள் அதன் அஸ்திவாரங்களை பற்றி எழுத அக்கறை
எடுத்துகொள்ளவில்லை...இன்றைய இளைய தலை முறையினரிடம் தன்னலமற்ற உழைப்பும்,
நேர்மையும் குறைந்து வருவதாக குறைப்பட்டு கொள்கிறோம்...என்ன
பயன்...நேயமும், உழைப்பும், நேர்மையாய் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை
நிகழ்வுகளையும் அனுபவங்களையும் வளரும் தலைமுறையினரும் வாசிக்கவேண்டும்
...அவர்களுடைய சிந்தனைக்குக்கொண்டு செல்லப்பட வேண்டும்...அந்த வகையில்
ஒரு மாவட்டத்துக்கே உதாரணமாய் வாழ்ந்த ஒருவரை பற்றிய ....தேடலே
இக்கட்டுரை ..... இந்த தேடலுக்கு என்ன காரணம்....அவர் வாழ்ந்த
வாழ்க்கை....ஊர் மக்களின் நலனுக்காகவும், சமூக மேம்பாட்டிற்க்காகவும்
..... நம் வாழ்நாளை அர்ப்பணித்த விதம்.......இவைகள் தான்.. எப்படியும்
வாழலாம் என வாழ்ந்தவர்கள் ஏராளம்... ………இப்படித்தான் வாழவேண்டும்
என எல்லைகளை வகுத்து கொண்டவர்களும் ஏராளம்...இந்த இரு சராசரி நிலைகளுக்கும்
அப்பால் சிலர் உண்டு....அவர்கள் தாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை...
மக்கள் தொண்டற்றுவதற்காகவே அவ்வபோது இறைவன் அனுப்பி வைக்கின்ற கொடை...
அப்படி விடையும் கொடையுமாக வாழ்ந்தவர் தான் அமரர் திரு சீத்தா ...மறைந்தும் தம்
ஊர் மக்களின் மனதில் மாறாத பசுமையுடன் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்.......
வலிமையான வளர்ச்சி பணியாற்றிய எளிமையான
தலைவர் திரு.சீதாராமன் அவர்களை பற்றி தான் இந்த பதிவில் ...பார்க்க
இருக்கிறோம்....சீத்தா என அனைவராலும் அன்பாய் அழைக்க பட்டவர்........

சுமார் 150 வருடங்களுக்கு முன்பு வள்ளலார் வருகை தந்த புண்ணிய பூமி தான்
....கடலூர் மாவட்டத்தின் ....வடலூர் .....பார்வதிபுரம்.......வள்ளலார்
அவர்கள் தர்மசாலையை நிறுவியது பார்வதிபுரத்தில் தான்......நீங்கள்
எல்லாம் கேள்விபட்டிருக்கலாம் ...வள்ளலாரின் அணையா அடுப்பு
பற்றி...இப்போதும் அந்த அடுப்பு தான் பல்லாயிர கணக்கானோரின் பசியை
இன்றும் தீர்த்துக்கொண்டிருக்கிறது ...

அந்த புண்ணிய பூமியின் மைந்தன் தான் சீத்தா....

சீத்தா அவர்கள் பற்றி ;
-----------------------------------
...அன்பு ததும்பும் கண்கள் - எவரையும் நிதானிக்க வைக்கும் மரியாதைக்குரிய
பார்வை - முகம்- எடுப்பான தோற்றம் - கனிவான பேச்சு - குரல் - நடுத்தரக்
குடும்பத்தைச் சேர்ந்த உயர்த்தர சிந்தனையாளர்..நிறம் - பொலிவு....
பெரும்பாலும் அரசியலிலும் ஆன்மீகத்திலும் வெற்றிகளை குவித்தவர்கள் பள்ளி
படிப்பில் தவறியவர்களாகவே இருக்கிறார்கள்....இதற்கு சீத்தா வும் விதி
விலக்கல்ல...பிற்காலத்தில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும்,
மொழிப்பெயர்க்கவும் செய்த சீத்தா அவர்கள் இண்டர்மீடியட் தேர்வில்
தவறியவர்... என்பது குறிப்பிடத்தக்கது... சிறந்த மேடை
பேச்சாளர்...எல்லோரிடத்திலும் வெகு இயல்பாய் பழக கூடிய
மனிதர்...பிரதிபலன் பார்க்காமல் எல்லாருக்கும் உதவக்கூடியவர்...அமைச்சர்,
எம் எல் ஏ எல்லாம் அப்புறம் தானாம்....எங்கு சென்றாலும் முதல் மரியாதை
சீத்தா வுக்கு தானம்...அந்த அளவுக்கு அவருடைய ஆளுமை தோற்றம் இருந்ததாக
சொல்லப்படுகிறது... மடிப்பு கலையாத கதர் சட்டை, கறையில்லாத கதர் வேட்டி
தான் உடுத்துவார்...மனசு குழந்தை மாதிரி...எழுதினா எழுத்தும் அழகா
இருக்கும்... புத்தகம் அதிகமாய் படிப்பவர்....தினமணி செய்தி தாளை கையில்
வைத்திருப்பார் எப்போதும் என நினைவுக்கூறப்படுகிறார்...
சைக்கிளில் சவாரி செய்தவர் (சைக்கிள் அப்பொழுதுகளில் பெரிய விஷயம்)...
மூன்று முறை வள்ளலார் தெய்வ நிலையத்தின் தலைவராக இருந்தவர்...ஊராட்சி
மன்ற தலைவராக பல முறை இருந்தவர்...வீட்டு வசதி கடன் சங்கத்தில் தலைவராக
இருந்தவர்...பல கமிட்டிகளுக்கு தலைமை பொறுப்பேற்றவர்... சுதந்திரத்திற்கு
பிறகு நம் சென்னை மாகாணத்தின் முதல் முன்னால் முதலமைச்சராக
அறியப்படும்...OPR ஒமந்தூரார் ராமசாமி ரெட்டியார், S.S. ராமசாமி
படையாச்சியார் /SSR/ …../அரசியலில் மிக பிரபாலமானவர்/,
பொள்ளாசி நா.மாகாலிங்கம், பண்ருட்டி ராமசந்திரனார் / இக்கால அரசியலிலும்
இருப்பவர்/, முன்னாள் அமைச்சர் சி.ப. ஆதித்தனார் ஆகியோர்களின் நெருங்கிய நண்பராக அவர்களின் நட்பு வட்டத்தில் இருந்திருக்கிறார்... சீத்தா அவர்கள்....

60 ஆண்டுகளுக்கு முன்னர் சீத்தா வாழ்ந்த காலத்தில் வடலூரின் நிலை என்ன
-----------------------------------------------------------------------------------------------------------------------------------.

..குடிக்க தண்ணீர் கிடையாது ..விவசாயம் ஒருபோக மகசூல்தான் ...அதற்கப்புறம்
ஆடுமாடுகளின் மேச்சல் கரம்பாகக் கிடக்கும்...விரல்களால் தலையில் கோதி
எடுத்துக்கொண்ட ஒழுங்கற்ற தலைவகிடு போல அந்தக் கரம்புகளில் ஓடும் ஒற்றை
அடிப்பாதைகளில் ஊற்றுக் கேணிகளைத் தேடி , தலையிலும் இடுப்பிலும்
குடங்களோடு நடந்த குடும்பத்துக் கோகிலங்கள் அன்றைய பஞ்சத்தை
வஞ்சகமில்லாமல் அனுபவித்தவர்கள் ...மேலும் ஊருக்குள் தெருக்கள் என்றால்
மண்பாதைகள் தான்...ஆள் நடந்தால் தலை மட்டுமே தெரியும் அவ்வளவு பள்ளமான
பாதைகள்-குறுகலான பாதைகள்...ஊரில் எங்கே மழை பெய்தாலும் அந்த பாதைகள்
தான் வடிகால்கள்...மழை முடிந்து வெகு நாட்களுக்கு ஊற்றோட்டம் நச
நசவென்று....அப்பொழுதுகளில் கட்டைவண்டிகள் தான்...பாதையில் வருகையில்
வண்டி வருதோய் என்ற வாசகத்தோடு, விசில் சத்தமும் சேர்ந்துக்கொள்ளும்...எதிரில்
வண்டி வந்து விட கூடாது என்பதற்காய்...ஏனெனில் ஒதுங்க இடம்
இருக்காது...ஊரின் மேற்கே இருந்த தெருக்கள் மிகவும் மோசம் என
சொல்லப்படுகிறது...ஆள் உயரத்திற்கு அடர்ந்த மலைச் சப்பாத்தி கள்ளி ...
மிகுந்திருக்குமாம்....மாலை 4 மணிக்கே இருட்டி விடும் அளவிற்கு ஊருக்குள்
புதர்கள் நிறைந்து இருந்ததாய் சொல்லப்படுகிறது....
சர்க்கார் இரவு வெளிச்சதிற்காய் லாந்தர் விளக்குகள் ஊருக்கு இரண்டு
தந்திருந்தாலும்,,,வெகுநாட்கள் அவைகள் பராமரிக்க ஆள் இன்றி எரியாதாம்...
மேலும் வடலூரில் அப்போது எந்த விதமான தொழிற்சாலைகளும்
கிடையாது...சாப்பிடுவதற்கு ஓட்டல் கிடையாது...தந்தி நிலையம்
கிடையாது...இருந்த ரயில்வே நிலையத்தையும் மூடி விட சர்க்கார் யோசித்துக்
கொண்டிருந்தது...நிலக்கரி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால்
ஒரு சில சோதனைகள் என்ற பெயரில் எதோ சில வேலைகள் மட்டுமே நடந்து
கொண்டிருந்தன...

இனி சீத்தா அவர்களின் சேவைகள்
-------------------------------------------------------
1938-இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் முதன் முதலில் தமிழகத்தில்
வெடித்தது....மக்கள் அனைவரும் அந்நிய மொழிக்கு எதிராய் போராட்டத்தில்
ஈடுப்பட்டனர்...சீத்தா அவர்களின் உள்ளத்திலும் அந்த எழுச்சி அலை
வீசியது...பொது விஷயங்களில் அவரை ஈடுப்படத்தூண்டியது...சமுதாயம் வளரனும்,
ஊர் வளரனும் என்பதிலேயே தீவிரமாகவும், உறுதியாகவும் இருந்தவர்...1965-
ஆம் ஆண்டு சீத்தா அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டார்...முதல் முதலில் தேர்தலில் வாக்கு சீட்டு முறை இவர்
தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து தான் தொடங்கியது...தலைவருக்குள்ள
அதிகாரத்தையும், தன்னுடைய அரசியல் அனுபவத்தையும், தனக்கிருந்த மேல் மட்ட
ஆட்சியாளர்களின் தொடர்புகளையும் ஒன்றிணைத்து அதுவரை இருந்து வந்த ஊரின்
பழமையை தலைகீழாக புரட்டி போட்டார்...
SSR அந்நேரம் அரசியலில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தவர்...ஊர் மக்களின்
நலனுக்காகவும், கல்விக்காக வேலை வாய்ப்புகளுக்காகவும்... சீத்தா அவர்கள்
என்ன தேவை என்று சென்றாலும் சம்பந்த பட்ட அரசு அலுவலகத்தை அணுகி
முடித்துக்கொடுப்பார்..SSR...அவ்வளவு நெருங்கிய நட்பு
இருவருக்கும்...இந்த நட்பை வைத்தே சாலை, மின்சாரம், பாசன வசதி என
அனைத்தையும் ஊர் மக்களுக்கு பெற்று தந்திருக்கிறார்....சீத்தா அவர்கள் …
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் வாழ்ந்த
மண்ணின் மைந்தன் சீத்தா ....முதலில் தண்ணீர் பஞ்சத்தை கவனத்தில்
கொண்டிருக்கிறார்...கலெக்டர் இடம் மனு கொடுத்திருக்கிறார்...குடி தண்ணீர்
அரசாங்க உதவின்னு ஏதும் செய்ய முடியாது...விவசாயத்துக்கு தண்ணீர்
இல்லைன்னு மனு கொடுத்த ஏதாவது செய்யலாம் என்று கலெக்டர்
சொல்லவும்....சீத்தா அவர் சொற் படி கேட்டு,,, வடலூரில் அமைத்தது தான்
தாதன் குட்டை போர்வெல் ...........ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு
தண்ணீர் வர வில்லை....அதற்காக அப்டியே விட்டு விடவில்லை...சீத்தா
அவர்கள்....ஆர்டிசியன் நீரோட்டம் எப்டி போகுதுன்னு கலெக்டர் ஆபீஸ் இல்
வரைபடம் வாங்கி பார்த்து...தனது செலவில் கல்வெட்டியில் ஒரு
போர்வெல்லும்....பதனி ஏரியில் ஒரு போர்வெல்லும் போட்டு
தந்திருக்கிறார்கள்....அதன் பிறகே வடலூரில் குறிப்பாக பார்வதி புரத்தில்
தண்ணீர் பஞ்சம் நீங்கியதாக....அவ்வூர் மக்கள் இன்றும் நினைவு
கூறுகிறார்கள்...

ஊருக்கு மின்சாரம் வேண்டும் என அடுத்து யோசித்திருப்பார் போலும் சீத்தா
அவர்கள்....தனது சொந்த செலவில் கொண்டு வந்து விட வேண்டும் என்பதே
அவர்களின் ஆசை...அதன் படி தனது சொந்த பணத்தை போட்டு...ஒவ்வொரு மின்
கம்பங்கள் நட ஆள்கள் குழிகள் வெட்டிய போது ….கூடவே இருந்து தானே
...அப்பணிகளை செவ்வனே செய்து முடித்து ஊருக்கு மின்சாரமும் கொண்டு
வந்திருக்கிறார் ....

அடுத்து OPR ....அவர்கள் 1947 இல் சென்னை மாகாண முதலமைச்சர்....வள்ளலார்
கொள்கைகளில் ஈடுபாடு மிக்கவர்....வடலூரில் குருகுலம் என்றொரு பள்ளியை
தொடங்கினார்கள்....அவரிடம் சீத்தா அவர்களுக்கு இருந்த
பழக்கமும்....கல்விச் சேவையில் OPR கும் சீத்தா வுக்கும் இருந்த ஒத்த
கருத்தினால்....OPR இன் வழிக்காட்டுதலின் பேரில்....சீத்தா அவர்களின்
அரும் முயற்சியினால் ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது....அதிகமாக
ஆசிரியர்கள் நிறைந்த இடம் வடலூர் பார்வதிபுரம்...////எங்க வீட்டிலேயே 7
ஆசிரியர்கள் என்றால் பார்த்துக்கொளுங்களேன்////.....கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள்
நிறைந்த பகுதி வடலூர் பார்வதிபுரம் தான்....அந்த பெருமை சீத்தா அவர்களையே சாரும்.....

இவ்வளவு செய்தவருக்கு சாலை போடுவதெல்லாம் ஒரு விஷயமா .......சாதரணமாக
செய்து முடித்தார்.... சாலைகளும் அமைத்தார்கள்....அப்படி பாதையாய்
அகலப்படுத்தி சாலைகள் அமைக்கின்றபோது வீடு, தோட்டம் குறுக்கிட்டால் அது
யாருடையதாக இருந்தாலும் சரி, சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி.....தான்
திட்டமிட்ட படியே சாதித்தார் சீத்தா....

விவசாயத்துக்கு தள்ளுபடி என பல திட்டங்கள் நம் அரசு
அறிவிக்கிறது..இப்பொழுதுகளில் ..இதையெல்லாம் சீத்தா அவர்கள் அவரது
காலத்திலேயே மிக சாதாரணமாய் செய்து இருக்கிறார்கள்....பார்வதிபுர
மக்களுக்கு இருந்த 5 ஆண்டு வரி பாக்கியை...மாவட்ட ஆட்சியரின் அனுமதி
பெற்று முறைப்படி.... தள்ளுபடி செய்து தந்திருக்கிறார்கள்....

நூல் நிலையம் அமைக்க ஒரு குழு அமைத்து .....அவரே அதன் தலைவராகவும்
இருந்து.....அதன் பொருட்செலவுக்காக 'உடைந்த சிலை' என்ற நாடகமும் நடத்தி
நூலகத்தை கொண்டு வந்து சேர்த்திருகிறார்கள் சீத்தா அவர்கள் .....ஊரார்
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென ,. அப்போழுதுகளிலே ஆம்புலன்ஸ் யை
ஊருக்குள் கொண்டு வந்திருக்கிறார்....ஆம்புலன்ஸ் கொண்டு வருவது ஒரு விஷயமா?...அப்பொழுதுகளில் ஆம்புலன்ஸ்.... செல்வாக்கு மிகுந்தவர்களால்
மட்டுமே கொண்டு வர இயலும்.....அப்பொழுதுதான் ஆம்புலன்ஸ் என்று
ஒன்று இருப்பதே தெரியுமாம் ஊர் மக்கள் பலருக்கு ........

பின்னாளில் கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் கூட்டுறவு துறை அமைச்சராக
பணியாற்றிய சி.பா. ஆதித்தனார் அவர்கள் தமிழர் இயக்கதை
நடத்திக்கொண்டிருந்தார்கள்....அப்பொழுதுகளில் வெகு முறை மக்கள் பணியாற்ற
சீத்தவை அன்பாய் அழைத்ததாக சொல்லப்படுகிறது ...அந்த அளவிற்கு சீத்தாவுக்கு
மக்கள் செல்வாக்கு இருந்திருப்பது வியக்க செய்கிறது......இங்கு நான்
குறிப்பிடபடாத நிறைய மேல்மட்ட மக்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில்
இருந்திருகிறார்கள் சீத்தா ...

ஊருக்காக ஒரு கோரிக்கையை திரு சீத்தா அவர்கள் கலெக்டர் இடம்
வைத்திருக்கிறார்கள்...அதற்க்கு சட்டத்தில் இடம் இல்லை என்றாராம்
கலெக்டர் ....அவரிடம் வாதிடாமல் சீத்தா அவர்கள்...சென்னை சென்று
பஞ்சாயத்து சட்ட நூல்களில் உள்ள அக்கோரிக்கைக்கு சம்பந்தமான சட்டத்தை
காண்பித்திருக்கிறார்கள்.....கலெக்டர் அவர்கள் மறுக்க முடியாமல் சீத்தா
வைத்த கோரிக்கைக்கு அனுமதி அளித்தார்களாம் ....


விளைச்சலின் ஜீவன் நீராதாரம் என்பதை உணர்ந்து செயல் படுத்திய சீத்தா
அவர்கள், இயற்க்கை இடற்பாடுகளிருந்து விளைபொருள்களைக் காப்பாற்ற வேண்டும்
என்பதையும் சிந்தித்தார்...ஊரின் கிழக்கே ''தானிய சேமிப்புக் கிடங்கு''
கிடங்கு முயற்சி எடுத்து முடித்தார்,..இது அவருடைய கடைசி காலத்து பொது
பணி....

ஊரார்கள் வாய் மொழியிலிருந்து ஒன்று புரிந்து கொள்ளலாம் ...சீத்தா
அவர்கள் தனக்கிருந்த செல்வாக்கு, தன்னுடைய அறிவு, திறமைகள், தோற்றம்
தனக்கிருந்த அரசியல் செல்வாக்கு , முக்கியஸ்தர்களின் நெருக்கம் ஆகிய
எல்லாவற்றையும் ஊருக்காகவே பயன்படுத்தினார்.......ஊர்மக்களின்
ஒட்டுமொத்த நலனுக்காகவே செலவிட்டார் .....பாசன வசதி, சாலை வசதி ,
கல்வி , மின்சாரம் , உத்தியோகங்கள் என எல்லாப்பணிகளையும் முனைப்போடு
செய்து விட்டு ,,,,,,,,சென்றிருக்கிறார்கள் ...

சீத்தா ஓர் தன்னலமற்ற மக்கள் நல உழியர்....அவருக்குப்பின் அவருடைய இடத்தை
நிரப்ப்க்கூடியவராக துணிவும், தளரா முயற்சியும் கொண்டு தொண்டாற்றக் கூடிய ஒரு
தலைவனின் வரவுக்காக ஊர் காத்திருக்கிறது - இன்றைக்கும் கூட.....

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் இன்று ஊர் சொல்ல வேண்டும்

(இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது எனக்குள் இருக்கும் சீத்தாவாகவே இருக்கலாம்....
எப்படி என்கிறீர்களா? சீத்தாவின் பேத்தி குட்டி சீத்தா தானே)

(மேலே நீங்கள் பார்க்கும் படம் சீத்தா அவர்கள் தான்.....அவருக்காக வெளியிட்ட
புத்தகத்தின் முகப்பு பகுதி ....)

எழுதியவர் : ஆனந்தி. ரா (22-Jan-16, 6:22 pm)
பார்வை : 401

மேலே