அங்குச பார்வையாலே
அங்குச பார்வையாலே !
துணிந்தவன்தான்
துப்பாக்கி தோட்டாவுக்கே!
தொலைந்தல்லவா
போனேன்….!
துளைக்கும் விழிகளுக்கே!
கரங்களை முறித்தவன்தான்
எதிரியை மல்யுத்ததிலே!
தெறித்து விழுகின்றேனே!
மென்விரல்கள் பட்டே!
அடக்கி விட்டேன்
அங்குசத்தாலே
மதயானையை!
அடங்கியல்லவா போனேன்!
அங்குச பார்வையாலே !
இப்படியெல்லாம் நான்
தடுமாறி…..தடம் மாறி
போவதற்கு ……!
என்னவென பெயரோ ?
------- கே. அசோகன்.