ஜிக்கா வைரஸ்
கருத்தரித்த பெண்களும்
கவலையிலே கலங்கினரே !
கொசுக்களாலே பரவுதே ;
குழந்தையையும் துரத்துதே !
தலை சிறுத்து பிறக்குதாம் ;
தாயின் மனதை பிளக்குதாம் !
கை இரண்டும் அடி வயிற்றில் ;
கண்களிலே கண்ணீரும்;
காற்றாற்று அருவியாய் ;
கவலையிலே உன் தாயும் !
ஜிக்கா எனும் வைரசால் ;
ஜீரணிக்க முடியாமல் ;
மடிப்பிச்சை ஏந்தினால் ;
மகனை முழுதாய் வேண்டியே !

