அகனின் 281289- மரபில்

அகனின் 281289 கவிதையினை மரபு வடிவில் எழுத முயன்ற போது வந்தது இது:

என்னவளைப் பார்த்த நிலா
இறங்கவிட்ட கண்ணீரைப்
பின்னிரவில் பனியென்ற
பெயரினிலே ஊர்பார்க்கும்!

தன்,நெற்றிப் பொட்டுகளைத்
தான்,வீசி அவள்சென்றாள்;
இன்னுமதை விண்மீன்கள்
என்றுலகம் பாடிவரும்!

கள்ளியவள் முகப்பூவில்
கவலை எழுந்ததெனில்
முள்ளென்று சிலருரைப்பர்;
முகப்பருவாய்ப் பலர்சொல்வர்!

பிச்சியவள் முகம்காணும்
பேறில்லா வேர்களுமே
உச்சியினில் மொட்டெடுத்தே
உவகையினை வெளிக்காட்டும்!

பிள்ளைகளை மலரென்பார்;
பிரசவித்த கனியென்பார்!
கிள்ளைகளோ நம்கையில்
கிடைத்த விதைகளடி!
=== -===

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (27-Jan-16, 11:54 am)
பார்வை : 73

மேலே