மாற்றங்கள்
மாற்றங்கள் என்னை மாற்றிக்
கொண்டுதான் உள்ளது
ஏற்றங்கள் நிறைந்து இருப்பதால்
இறக்கங்கள் அனுபவமாய் மாறின
தேற்றங்கள் பல அறிந்தும்
கிறக்கத்தில் சிக்கியும் இருந்துளன்
உறக்கத்தில் எனை மறந்துளன்
தடுக்கி விழுந்தும் எழுந்தேன்
மீண்டும் விழுவேன் என்றறிந்து
நிலையா உலகில் என் எண்ணங்களும்
நிலையா என்று உணர்ந்து.
வள்ளுவனைக் கண்டேன் சில நாள்
காமுகனைக் கண்டேன் சில நாள்
சூழ்நிலை மாற்றம் என்னை சுழற்றிக்
கொண்டுதான் உள்ளது
செல்வா