பாடல் -முஹம்மத் ஸர்பான்

(யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை எனும் பாடல் ராகத்தில்)

அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே
ஊர் ஊராய் ஒரு நிலவு என்னை துரத்தியதே
பால் மரமாய் இருந்தனே
ஒரு மலராய் பூத்தாயே
பனி நீரில் நனைந்தனே
விஷ முள்ளால் குத்தாதே
விஷ முள்ளால் குத்தாதே
அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே

என்னை சுமந்த தாய் போல
என்னவள் முகம் பார்த்தேன்
காயம் பட்ட நெஞ்சத்தின் மேல்
அவளே மருந்தானாள்
என் இதயம் பிறந்தது யாரால்
என்றால் என் தாய் நீ என்பேன்
என் பார்வைகள் பார்ப்பது யாரை
என்றால் என் கண் நீ என்பேன்
உன்னை பிரியும் நொடிகள் வந்தாலும்
உலகை எரிப்பவனே
உலகை எரிப்பவனே
அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே

உந்தன் கையில் பூ விழுந்தால்
எனக்கு வலிக்கிறதே
கனவில் மடியில் நீ இருந்தால்
மரணம் வெல்வனே
காதல் வந்ததும் காமம் எல்லாம்
தொலைந்த போனதே
அவள் நெஞ்சின் மேலே தூங்கும்
நேரம் நானும் தாயானேன்
உந்தன் உள்ளத்தின் ஓசை நான் கேட்டு
தினமும் வாழ்வனே
தினமும் வாழ்வனே
அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே

அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே
ஊர் ஊராய் ஒரு நிலவு என்னை துரத்தியதே
பால் மரமாய் இருந்தனே
ஒரு மலராய் பூத்தாயே
பனி நீரில் நனைந்தனே
விஷ முள்ளால் குத்தாதே
விஷ முள்ளால் குத்தாதே
அணு அணுவாய் என்னுயிரை
உண்டு வாழ்பவளே

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Feb-16, 5:37 pm)
பார்வை : 167

மேலே