தமிழைச் சரியாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்

சில நாட்களுக்கு முன் நான் வாசித்த ஒரு கட்டுரையில் ஒருவர், ’எழுத்துப்பிழைகளை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்’ என்று கேட்டும், மற்றொருவர் புணர்ச்சி விதி தேவையா என்றும் கட்டுரை எழுதியிருந்தார்கள். சென்ற வார தினமலர் வாரமலர் குறுக்கெழுத்துப் போட்டிக்கான பதில்கள் சிலவும், நான் வெவ்வேறு பதிவுகளிலும் பார்த்த எழுத்துப் பிழைகளும், தவறான எழுத்துக்களை உபயோகித்தால் ஏற்படும் அபத்தங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

தவறான எழுத்துக்களின் உபயோகமும், ஒற்றுப் பிழைகளும் உற்றுப் பார்த்தாலும், மீண்டும் மீண்டும் வாசித்தாலும் புரிந்து கொள்ளலாம். நம்மை அறியாமல் ஏற்படும் பிழைகளை உணர்ந்ததும் திருத்தம் செய்து வெளியிட ‘எழுத்து’ தளத்தில் வாய்ப்பிருக்கிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம்.

தவறுகள்:

குளிங்கினேன், நிலைக்கொண்டிருக்கும், பலக் கோடி, புல்முளைத்தக் காடு, உஞ்சலில் பூனகளுக்கோ அடை விட, நவிழ்தல், அவர்கள்ள, குலம், ஆக்கரமிப்புகளை, தலமையில், கேரிக்கை, மகில்ச்சி, மகிள்ச்சி, துனை, நானம், கிழ்ழி, பரவைகள், கிருக்கு, கறண்சி, ஆறனங்கு, மொகறம், மறுத்துவமணை, சிருவன், குளுக்கல், குழுக்கல், பாக்கியசாளி, பாக்கியசாழி, ஆருவது சிணம், றோம், நானல், நாணள், கள்கி, கழ்கி, பளா, பழா, கெலப்புடா கெலப்பு, சாதரண ஊலியருக்கு, விண்ணபம், புதுபிக்கப்படும், விருந்தழ்தம், தமிழ்தொண்டு, மனபூர்வமான, தடைஇன்றி, வருடம்தோறும், எறியும், மனிதகளை, பார்வயில் படுவது.

ஒரு கவிதையில்

'ஒருமுறையாவது
புரிந்து கொல்லடி...' என்று 'கொள்ளடி' என்ற சொல்லுக்கு எழுத்து மாறியதால் பொருள் தவறாகி விடுகிறது. இதற்கு நல்ல படைப்பு என்று சான்று வேறு.

மேலேயுள்ள சொற்கள் கண்களையும், கருத்தையும் உறுத்தவில்லையா?

திருத்தி சரியாக எழுதப்பட்டவை:

குலுங்கினேன், நிலை கொண்டிருக்கும், பல கோடி, புல்முளைத்த காடு, ஊஞ்சலில் பூனைகளுக்கோ அதை விட, நவில்தல், அவர்களே, குளம், ஆக்கிரமிப்புகளை, தலைமையில், கோரிக்கை, மகிழ்ச்சி, துணை, நாணம், கிள்ளி, பறவைகள், கிறுக்கு, கரன்சி, ஆரணங்கு, மொகரம், மருத்துவமனை, சிறுவன், குலுக்கல், பாக்கியசாலி, ஆறுவது சினம், ரோம், நாணல், கல்கி, பலா, கெளப்புடா கெளப்பு, சாதாரண ஊழியருக்கு, விண்ணப்பம், புதுப்பிக்கப்படும், விருந்தமிழ்தம், தமிழ்த்தொண்டு, மனப்பூர்வமான, தடையின்றி, வருடந்தோறும், எரியும், மனிதர்களை, பார்வையில் படுவது.

தட்டச்சு செய்யும் போதும், பதிவதற்கு முன்பும் சற்று உற்று நோக்கினால் தவறுகள் புரியும். தயவு செய்து ’எனக்கு அவ்வளவாக தமிழ் வராது என்றும், நேரமில்லை என்றும், கைபேசியில் தட்டச்சு செய்தேன்’ என்றும் சமாதானம் சொல்லாதீர்கள்!

திருத்து | நீக்கு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 11:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 351

மேலே