பாடு பாடு பாரதப் பண்பாடு - சக்ரவாகம்

அர்ஜுன், மீனா நடித்த செங்கோட்டை (1996) திரைப்படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் சித்ரா பாடிய ‘பாடு பாடு பாரத பண்பாடு’ என்ற பாடல் சக்ரவாகம் ராகத்தில் அமைந்த அருமையான ஒரு பாடலாகும். இப்படத்தில் உடன் நடிக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் நடிகை மீனா பாடுவதாக அமைந்திருக்கிறது.

பாடலாசிரியர் யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன
ரக்ஷ ரக்ஷ மஹேஸ்வரா

பாடு பாடு பாரதப் பண்பாடு
வாவ்..How beautiful
ம்..மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
ஓ..I like it.. I like it

விண்ணோடு காற்றோடு மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கேதான் பிறந்ததென்று கொண்டாடு..பாடு
பாடு பாடு பாரதப் பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு

மொழிகள் பிறந்ததும் இங்கேதான்
கலைகள் பிறந்ததும் இங்கேதான்
காதல் பிறந்ததும் இங்கேதான்
கற்பு நிலைத்ததும் இங்கேதான்

வில்லவன் ராமன் சீதைக்காக
வில் ஊன்றியதும் இங்கேதான்
அக்கினி தீர்த்தம் கோடி தீர்த்தம்
அத்தனை தீர்த்தமும் இங்கேதான்

தாலி என்னும் சின்னக் கயிறு
வேலியாவதும் இங்கேதான்
தாரம் தவிர இன்னோர் பெண்ணை
தாயாய் நினைப்பதும் இங்கேதான் (தாயாய்)
(பாடு பாடு)

சிற்பக் கலைகள் என்னென்ன
சித்திரக் கலைகள் என்னென்ன
நடனக் கலைகள் என்னென்ன
நாதம் கீதம் என்னென்ன

காளிதாசனும் கம்பநாடனும்
கவிதை சொன்னது என்னென்ன
ராஜரிஷிகளும் ஞான முனிகளும்
வேதம் சொன்னது என்னென்ன

விஞ்ஞானத்தால் முடியா இன்பம்
ஞானம் தந்தது என்னென்ன
இதயம் திறந்து சொல்லடி பெண்ணே
இதை விட சொர்க்கம் வேறென்ன?
இதை விட சொர்க்கம் வேறென்ன?
(பாடு பாடு)

விண்ணோடு காற்றோடு மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கேதான் பிறந்ததென்று கொண்டாடு..பாடு
(பாடு பாடு)

அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம


சக்ரவாக ராகத்தில் அமைந்த பிற பாடல்கள்:

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
வர்ணம் " ஜலஜாக்ஷி " பட்டணம் சுப்ரமண்யய்யர் ஆதி
வர்ணம் " இங்காதய " பட்டணம் சுப்ரமண்யய்யர் ஆதி
கிருதி "எடுலப்ரோதுவோ " தியாகராஜர் திரிபுட
கிருதி "சுகுணமுலே " தியாகராஜர் ரூபகம்
கிருதி "கஜானயுதம் " முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி "ஆடியபாதா " முத்துத் தாண்டவர் மிஸ்ரசாபு
கிருதி "காணக் கண் கோடி" கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி "அபகார நிந்தை" அருணகிரிநாதர் சதுஸ்ர ஜம்பை
கிருதி "அறிவுடையோர்" கோபாலகிருஷ்ண பாரதியார் மிஸ்ர ஜம்பை
கிருதி "ஈசனே இந்த " பாபநாசம் சிவன் ரூபகம்
கிருதி "உள்ளவறிவான் ஐயன்"இலட்சுமணப்பிள்ளை ஆதி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-16, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1728

சிறந்த கட்டுரைகள்

மேலே