சொந்த ஊரு
காதலி பிரிவின் பிடியில் ...
மரணம் தவணை முறையில் ...
நீ தான் என்னை காத்தாய்,
ஓடையிலே!
இமைகள் இல்லா கனவும் ...
இதயம் இல்லா உணர்வும் ...
என்னுள் சுழல ..
நீ தான் என்னை அணைத்தாய்
பார்வையிலே!
எனை இழந்து நான்
எங்கோ சென்ற இடமெலாம் ..
கவலை பிடியில் தப்பித்து நான் நிகழ்காலம் செல்ல ...
உன்மடி தேடினேன்!
என்னுள் விதைத்து கிடக்கும்
ஏக்கங்கள்
எங்கோ தொலைந்து போகின்றன...
உன் குரல் கேட்கையிலே!
உன்னில் நான் தவழ்ந்த இடங்கள் பார்கையில் நெஞ்சம் சரியுதே ...
என்னவள் பார்வை சாரல் தூவிய இடங்கள் வருகையில் சிலிர்குதே!
என் ஆசைகள் நிறைவேறி நான் மகிழ்ச்சியில் துள்ளிய காலமெலாம்
எனை அள்ளி அணைத்து உச்சிதனை முகர்ந்தாய் ....!
உலரா நினைவுகள் நான் போதும்.. போதும்... என கூறியும் நீ தந்து கொண்டே இருக்கிறாய் ...
இனி ஒரு ஜென்மம் இருப்பின் என் உயிர் உன்னுள் மட்டுமே
கதகதக்க வேண்டும் ...
கொஞ்சம் குடுத்து வைத்திருந்தால் என் காதலனாய் நீயும் கிடைக்க வேண்டும் !
இருக்கும் போது
உன்னை காணாமல் இறந்த பின்பு
சொர்க்கம் தேடும் உலகத்தாரை எள்ளி நகையாடும் நகையாளியாய் நான் ...!