சூட்சமம் - சந்தோஷ்
நரி தந்திரமாடுகிறது
காக்கா பாடுகிறது
ஏமாந்தவர் பாட்டி..!
பாட்டி சுட்டார்
காக்கா திருடியது
நரி தின்றது.
வடை பறிபோனது.
நரிக்கு ஆசை
காக்காவுக்கு ஆசை
பாட்டிக்கும் ஆசை
வடை மீது.
உழைத்தவன் ஏமாறுகிறான்
உழைப்புத் திருடனும் ஏமாறுகிறான்
உதவாக்கரையானாலும்
புத்தியுள்ளவன் சாதிக்கிறான்.
அநீதியென்றாலும்
இது உலகநியதி.
-இரா.சந்தோஷ் குமார்.