வெண்பா
நீ நிலாஜாடை போத்திய
அழகான பாவை .....
கரம் பிடிப்பேன்
நீ என்ற பூவை....
என்றென்றும் புன்னகை
உன் முகத்தில் தேவை....
இது போதும்
எதிர்கொள்வேன்
எமனென்ற சாவை....
முற்றுபுள்ளி வைக்காமல்
தொடர்வோம் நம் வாழ்வை...
முப்புள்ளி(...) ஆ(!)குறியாம்
கவிதையின் முற்று...
முதற்முடிவு புள்ளிகள்
நாமாகி நிற்க...
இடையில் உதிப்பானே
நமக்கான கண்ணன்...
இம்முப்புள்ளி
கோலத்தை
முச்சங்கம்
ரசிக்கட்டும் வியப்புற்று...
சஹாரா மனதினுள்
பூத்த பனிமலர் பூவே.....
உன் தேன் சுவைக்க முந்திடும்
போராளி என் நாவே....
கருந்தோல் உடுத்திய
வெண்மன பாவே
என் மனம் வென்ற பாவே
என் வெண்பா'வே....
ஓயாமல் என் கவிஅலைகள்
உன் பாதம் நனைக்கும்....

