பலதும் பத்தும்
இதயம் இல்லாதது கல்
இருந்தும் இல்லாதவர் போல்
சில மனிதர்கள்
சில்லறை என்பது செல்லாக் காசு போல
சில்லறைக்கும் உதாரணம் சில மனிதர்
சில்லறை சேர்ந்து தான் நோட்டாகும்
காதலில் தோற்றவன் புனிதன்
காதலில் ஜெயித்தவன் மனிதன்
இருவரும் உலகின் தண்டவாளங்கள்
பார்க்க பரிகசிக்க பரதேசி
வாழ்த்த வாழ்த்துரைக்க சுகவாசி
நோக்க நோன்பிருக்க சந்நியாசி
அன்பில் திளைத்தவன் அறிஞன்
அறிவில் தளைத்தவன் ஞானி
ஆசையில் துளிர்தவன் விஞ்ஞானி
கோபத்தை கொன்றவன் இறைவன்
பாபத்தை வென்றவன் மாமனிதன்
சாபத்தை ஏற்றவன் பரம சாது