உன்னை மறக்க நினைக்கிறேன்
காதலை சொல்லாமல்
சொல்லிக் கொண்டிருக்கும்
உன்னை நினைப்பதை விட
மறப்பதே மேல்......
ஆனால்
என்ன செய்வது
உன்னை மறக்க என்னால்
முடியவில்லையே......!
உன்னை காதலிக்கிறேன்
என்று எப்படி சொல்வது
ஆண் ஆன உனக்கே
துணிவில்லாத போது
பெண் என்னால்
என்ன செய்ய முடியும்...?
அப்படியே நான் துணிந்து
உன்னிடம் காதலை சொன்னபின்
நீ என்னை விரும்பவில்லை
என்றாயானால்...?
அதை கேட்டு
சாவதை விட
உன்னை மறப்பதே மேல்....
ஆனால் ஒன்று
உன்னை மறந்து வேறொருவனை
மணப்பேன் என்று
எண்ணிவிடாதே....!
உன்னை மறப்பேன்
என்று சொன்னேனே தவிர
என் காதலை அல்ல.........

