காதல் தேடல்

காணும் கனவின் ஓரத்தில்,
சிறு செவ்விதழின் புன்னகையில்
கரைந்து போன இதயமொன்று
தனியே தவிக்கும் வேளையில்,
தேனொழுகும் மோகக் குரலில்
காதல் கானம் பாடுகையில்,
மொட்டும் மலர்ந்து நடனமாடியது,
ஈருயிர் சேர்ந்து ஒன்றானது,
என்காதல் தேடல் தொடர்ந்தது.