வெங்கடேசன் கண்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வெங்கடேசன் கண்ணன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 31-Oct-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 537 |
புள்ளி | : 26 |
நான் பழமையை நேசிப்பவன், ஆனால் அதன் நினைவுகளில் வாழ்பவனல்லன்...
நிகழில் வாழ்பவன், ஆனால் எதிர்காலத்தை கட்டமைப்பவன்...
நான் எதுவாக விரும்புகிறேனோ அவ்வாறே ஆகிறேன்.
எழுதுகையில் கவிஞன் ஆகிறேன்,
வரைகையில் ஓவியன் ஆகிறேன்,
இசைக்கையில் கலைஞன் ஆகிறேன்,
இசையை இரசிக்கையில் இசைப்பிரியன் ஆகிறேன்,
இவ்வனைத்தும் கற்கையில் மாணவனும் ஆகிறேன்,
நான் என்றும் மனித நேயத்துடன் வாழ விரும்பும் ஓர் பிறவியும் ஆகிறேன்...
துக்கம் வேண்டாம் தோழா,
என் கைகள் உன் துணையாகும்.
துவண்டு விடாதே தோழா,
என் கைகள் உனைத் தாங்கும்.
வலிகள் வேண்டும் தோழா,
வாழ்வுதனை செம்மையாக்க.
தோல்விகள் வேண்டும் தோழா,
வெற்றியை நிலைநாட்ட.
கோவம் வேண்டாம் தோழா,
அமைதி பெருகும்.
கர்வம் வேண்டாம் தோழா,
இன்பம் கூடும்.
பணிவுகொள் தோழா,
உயர்ந்தவரைக் கண்டால்
துணிவுகொள் தோழா,
எதிரியைக் கண்டால்.
நூல்பல படி தோழா,
அறிவு பெருகும்.
இசைபல கேள் தோழா,
நிம்மதி கிடைக்கும்.
தமிழே நன்மொழி,
அறிந்திடு தோழா.
தமிழே உயர்மொழி,
கர்வம்கொள் தோழா.
தமிழுக்கென்றும் அழிவில்லை,
இறைவனுக்கே தெரியும் தோழா....
இத்தளத்தில் கவிதையின் கீழ் தேர்வுகள், தேர்வு செய்தவர்கள், மற்றும் வாசகரின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி இவையாவும் எதைக் குறிக்கிறது?
மற்றும் எதைக்கொண்டு புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன ?
பௌர்ணமியில் இரு நிலவுகள்,
என்வீட்டு மாடியில் அவள்.
இத்தளத்தில் கவிதையின் கீழ் தேர்வுகள், தேர்வு செய்தவர்கள், மற்றும் வாசகரின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி இவையாவும் எதைக் குறிக்கிறது?
மற்றும் எதைக்கொண்டு புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன ?
மழை தரும் மண்வாசம்,
பூக்களுக்கு கோவம்.
மழை தரும் மண்வாசம்,
பூக்களுக்கு கோவம்.
தாகம் தணிய மண் கேட்ட வரம்,
பெய்யென பெய்த மழை.
உன் மனதின் புழுதியிலே
காதல் விதை நான் விதைத்தும்
மழையாக மாறி
அன்பு மழை நான் தெளித்தும்
தூக்கத்தை தினம் தொலைத்து
சொல்லுக்கு உயிர் கொடுத்தும்
உன் மனதின் ஆழத்தில்
நம் காதல் வேரோட
நீயாக உன் மனதில்
தடையொன்று இட்டதென்ன...
தற்காலிகக் காதலியே!
தடையங்கள் இல்லாமல்
தவிக்க விட்டுப் போனதென்ன...!
***
தேனிதழ் கொண்ட தேனே,
உன்னிரு விண்மீன் கண்களால்
என்னைக் கொல்லாதே...
கொஞ்சம் உடைந்துதான் போனேன்,
உன் உதட்டோரப் புன்னகையில்,
கள்ளவிழிப் பார்வை வீசி,
நெஞ்சில் புயல் வீச வைத்த சிலையே,
உன் விழியெனும் கடலில் விழுந்த
என் இதயமெனும் நீர்த்துளி எங்கேயடி அழகே...
நீரின் கருவில் தீயாய்த் தோன்றி,
செப்பு நேர்மென் கொங்கை கொண்டு
சீறிவரும் தீநதியே..!
நீராய் மாறி உன்மடியில் கலப்பேன்
என் மோகத்தீயணைக்க,
எனை ஆட்கொள்வாய்...